ஒப்பந்தத்தை மீறி நெட்பிளிக்ஸில் வெளியான படம்… 100 கோடி ரூபாய் வர்த்தகம்!

0
Follow on Google News

அக்ஷய் குமார் நடிப்பில் நவம்பர் 6 ஆம் தேதி வெளியானது சூர்யவன்ஷி திரைப்படம். அக்ஷய்குமார் , ரண்வீர் சிங் மற்றும் அஜய் தேவ்கன் நடிப்பில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் கடந்த நவம்பர் 6 ஆம் தேதி வெளியான திரைப்படம் சூர்யவன்ஷி. இந்த திரைப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும், விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களே வந்தன. அதனால் திரையரங்க வசூலும் குறைந்தது.

இந்நிலையில் வெளியாகி ஒரு மாதத்துக்குள்ளாகவே இப்போது நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது. முன்னதாக தயாரிப்பு நிறுவனத்துக்கும் நெட்பிள்க்ஸுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தில் ரிலிஸுக்கு பின் 8 வாரம் கழித்து ஓடிடியில் வெளியாக 75 கோடி ரூபாய் பேசப்பட்டது. ஆனால் இப்போது ஒரு மாதம் முன்னதாகவே வெளியிட கூடுதலாக 25 கோடி ரூபாய் கொடுத்து 100 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாம்.