மாநாடு வெற்றி… சூட்டோடு சூடாக வரும் வெந்து தணிந்தது காடு டீசர்!

0
Follow on Google News

சிம்புக்கு மாநாடு படம் மூலமாக நல்ல நேரம் தொடங்கி விட்டதாகவே திரையுலகில் உள்ளவர்கள் பேச ஆரம்பித்துள்ளனர். மாநாடு படத்தின் வெற்றி சிம்புவின் மார்க்கெட்டை பல மடங்கு விரிவடைய செய்துள்ளது.

இரண்டாவது வாரத்திலும் வெற்றிகரமாக மாநாடு ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் சிம்புவின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக அவர் அடுத்து நடிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் டீசரை அடுத்த வாரம் வெளியிட உள்ளார்களாம்.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ள நிலையில் படம் மார்ச் மாதம் திரையைக் காண உள்ளது. இந்த படங்களுக்கு பிறகு சிம்பு நடிப்பில் கொரோனா குமார், பத்து தல மற்றும் இயக்குனர் ராம் இயக்கும் புதிய படம் என அடுத்தடுத்த படங்கள் மீதும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது.