கள்ளச்சாராயம் காய்ச்சி குண்டாஸ்ல உள்ள போன ஆள் தான …தன்னை இழிவாக பேசிய திமுக அமைச்சரை வெளுத்து வாங்கிய அண்ணாமலை ..

0
Follow on Google News

திமுக அமைச்சர் காந்தி நேற்று பத்திரிகையாளர் சந்திப்பின் போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து ஒருமையில் மிக கீழ்த்தரமாக பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசு கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக குற்றம் சாட்டியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் காந்தி, “அவன் ஒரு தலைவரு, அவனை பற்றி பேசுற நீ.

அவனை ஒரு தலைவருன்னு நீயும் ஏத்துகிறியே. அவன் வாய்க்கு வந்ததெல்லாம் பேசிக்கிட்டு இருக்கான். ஒரு படித்தவன் என்ன பேசணுமோ அதைப் பேசணும். ஒரு தகுதி இல்லாத வார்த்தையைக்கூட பேசக் கூடாது. பவர் என்பது நிரந்தரமாக இருக்காது. அவன் எந்தத் தைரியத்தில் பேசுகிறான். மத்தியில் அரசு இருக்கு என்று பேசுறான். அதை நம்பி அந்த மாதிரி பேசக் கூடாது.” என்று காந்தி ஒருமையில் பதிலளித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் திமுக அமைச்சர் காந்தியின் இந்த பேச்சுக்கு பதிலடி தரும் விதத்தில். இன்று பத்திரிகையாளர் சந்திப்பின் போது, யாரோ ஒரு அமைச்சர் அவர் பேர் காந்தின்னு சொன்னாங்க, சத்தியமா அவர் பெயரை நேற்றுதான் கேள்விப்பட்டேன். காந்தி என்று சொல்லிவிட்டு வாந்தி எடுக்கிறார். 1994 ஆம் ஆண்டு கள்ளச்சாராயம் காய்ச்சி அப்போதைய அதிமுக ஆட்சியில்,

புரட்சித்தலைவி அம்மையார் ஜெயலலிதா அவர்களால் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறைக்குப் போன ஒரு மனிதர், மக்கள் பிரதிநிதியாக வந்து என்னைப் பற்றி குறை சொல்லுகிறார். அதாவது ஒரு அரசியல்வாதிக்கு மற்றொருவரை பற்றி குறை சொல்ல வேண்டுமென்றால் தகுதி வேண்டும் என திமுக அமைச்சர் காந்தியை வெளுத்து வாங்கிய அண்ணாமலை.

மேலும், அமைச்சர் காந்தி கள்ள சாராயம் காய்ச்சி குண்டர் சட்டத்தில் உள்ளே சென்றாரா.? இல்லையா.? என நீங்களே அவரிடம் கேள்வி கேளுங்கள், அவருக்கு எல்லாம் என்ன தகுதி இருக்கு என வெள்ளை சட்டை போட்டுக்கொண்டு வந்து காந்தி என பெயர் வைத்துக் கொண்டு வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார் என அமைச்சர் காந்தியின் இழிவான பேச்சுக்கு தக்க பதிலடி கொடுத்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை..