தொடங்கியது வலிமை தமிழக வியாபாரம்… 90 கோடியை தொட்டு சாதனை!

0
Follow on Google News

வலிமை படம் ஜனவரி 12 ஆம் தேதி பொங்கல் விடுமுறையைக் குறிவைத்து ரிலீஸாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித், கார்த்திகேயா மற்றும் ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வலிமை. இப்படத்தை நேர்கொண்ட பார்வை படத்துக்குப் பின்னர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் ஒரு பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பொங்கல் பண்டிகைக்கு வலிமை படம் வெளியாக உள்ளதாக முன்னதாகவே அறிவித்துவிட்டனர்.

ஆனால் என்ன தேதியில் ரிலீஸ் ஆகும் என்ற விவரம் இப்போது வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் ஜனவரி 12 ஆம் தேதி புதன் கிழமையில் வெளியாக அதிகவாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக வெளியானால் முதல் இரண்டு நாட்கள் ரசிகர்கள் பார்த்து மகிழ, பொங்கலுக்கு பிறகு பொதுவான ரசிகர்கள் பார்க்க ஏதுவாக இருக்கும் என்பதால் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாம்.

படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்த ரிலீஸ் தேதி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்நிலையில் தமிழக விநியோக உரிமை இப்போது ஜரூராக நடந்து வருகிறது. தமிழக விநியோக உரிமையை மொத்தமாகக் கைப்பற்றிய மதுரை அன்புச்செழியன் இப்போது அதை தனித்தனி ஏரியா வாரியாக பிரித்து விற்க ஆரம்பித்துள்ளார்.

முக்கியமான ஏரியாக்கள் விற்பனை இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாம். தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 90 கோடி ரூபாயை வியாபாரம் நெருங்கியுள்ளதாம். இதுவரை அஜித் படத்துக்கு இல்லாத ரெக்கார்ட் வியாபாரமாக அமைந்துள்ளது.