மு க ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் சமுத்திரக்கனி!

0
Follow on Google News

இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க உள்ளதாக அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் இப்போது அதிகமாக பயோபிக் படங்கள் உருவாக ஆரம்பித்துள்ளன. இந்த பயோபிக்குகளில் அதிகமாக அரசியல் தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்ற சாதனையாளர்களின் படங்களே அதிகமாக உள்ளன.

சமீபத்தில் வெளியான தலைவி படம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் என்பதும் அது பரவலாக கவனத்தை ஈர்த்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போதைய முதல்வர் மு க ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க உள்ளதாக இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். அதற்காக தரவுகள் மற்றும் தகவல்களை இப்போது திரட்டி வருவதாகவும் கூறியுள்ளார். சமுத்திரக்கனியின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.