சமித்திரக்கனியின் ரைட்டர் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

0
Follow on Google News

சமுத்திரக்கனி கதையின் மையக் கதாபாத்திரத்தில் நடித்திருகும் ரைட்டர் படத்தின் ரிலிஸ் டிசம்பர் 24 ஆம் தேதி அறிவிக்கபப்ட்டுள்ளது. காவல்துறையில் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ரைட்டர் என்று ஒரு காவல் அதிகாரி இருப்பார். அவரிடம் தான் மக்கள் தங்கள் புகாரை எழுத சொல்லி முறையிடுவர்.

ஒரு ரைட்டர் தன் வாழ்க்கையில் பல ஆயிரக்கணக்கான புகார்களையும் குற்றங்களையும் தன் கையால் பதிவு செய்திருப்பார். அப்படி ஒரு காவல்துறை எழுத்தரின் கதையைதான் ரைட்டர் என்ற பெயரில் சமுத்திரக்கனி நடிப்பில் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார்.

இந்த படத்தை பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 24 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை ஒட்டி இந்த படத்தின் ரிலிஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.