அண்ணனுக்காக தங்க செயின் கேட்கும் பிரேம்ஜி!

0
Follow on Google News

மாநாடு படத்தின் வெற்றியால் அந்த படத்தில் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய அளவில் மார்க்கெட் உருவாகியுள்ளது. ரஜினிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான அண்ணாத்த திரைப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்தது சன் பிக்சர்ஸ். இந்த படத்தின் மூலம் வசூலை அள்ள தீபாவளி நாளில் அதிக திரைகளில் ரிலீஸ் செய்தது.

ஆனால் படத்துக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம். இந்நிலையில் இயக்குனர் சிவாவை ரஜினி அவரின் வீட்டுக்கே சர்ப்ரைஸாக சென்று சந்தித்து அவருக்கு தங்க சங்கில் பரிசளித்துள்ளார். இதனால் இவர்கள் இருவரும் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த செய்தியின் புகைப்படத்தைப் பகிர்ந்த நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் சிம்புவை டேக் செய்து ‘மை டியர் தலைவா நான் என் அண்ணன் வெங்கட் பிரபுவின் முகவரி அனுப்பவா?’ என ஜாலியாகக் கேட்டுள்ளார். மாநாடு படத்தின் மூலம் சிம்புவுக்கு மிகப்பெரிய வெற்றியை வெங்கட்பிரபு கொடுத்துள்ளார் என்பதால் பிரேம்ஜி ரஜினி போல சிம்புவும் தனது அண்ணனுக்கு தங்கச் செயின் கேட்டுள்ளார்.