மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி பட டீசர் வெளியீடு!

0
Follow on Google News

கன்னட சூப்பர் ஸ்டார் நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த மாதம் மாரடைப்புக் காரணமாக இயற்கை எய்தினார். புனித்தின் மறைவு கன்னட திரையுலகம் மற்றும் அவரின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சோக அலையை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் தென்னிந்திய மற்றும் இந்திய சினிமாக் கலைஞர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது சம்மந்தமாக அனைவரும் தங்கள் அஞ்சலிகளை பகிர்ந்துகொண்டனர். இந்நிலையில் புனித் நடித்து முடித்துள்ள கந்ததகுடி என்ற படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இப்போது மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர் நடிப்பில் வெளியாகும் கடைசி திரைப்படம் இதுவாகதான் இருக்கும் என்பதால் ரசிகர்கள் இந்த டீசரைக் கொண்டாடி வருகின்றனர்.