பிற மாநிலத்தில் இருந்தும் எப்ஐஆர் பதிவு செய்து கைது செய்ய முடியும்… நேரடியாக எச்சரித்த அண்ணாமலை…

0
Follow on Google News

பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது.. சமூக வலைதளங்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட திமுகவினர், திமுக ஐடி விங்கை சேர்ந்தவர்கள், திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள்.பேசிய வீடியோவை உங்களிடம் காண்பிக்கிறேன். அதில் என்னவெல்லாம் பேசி இருக்கிறார்கள் என்று நீங்களே பாருங்கள். முப்படை தளபதி விபத்தை கொலை செய்தது யார்.? என்கிற வியூகத்தில் பதிவு.

124A பிரிவின் கீழ் மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்றால், அதைவிட 100 மடங்கு மோசமான பதிவுகளை திமுக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் பதிவு செய்து உள்ளார்கள். அதுமட்டுமல்ல முப்படை தளபதி மரணமடைந்தது சரி என திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்கள் கொண்டாடி இருக்கிறார்கள். அதற்கான ஆதாரமும் உங்களிடம் நான் கொடுக்கின்றேன். ஆனால் இங்கே இருக்கும் அரசுக்கு எதுவுமே கண்ணுக்குத் தெரியாது.

யாராவது தேசியவாதிகள் ஒரு கருத்தைச் சொல்லும் போது அதை பெரிய பிரச்சனையாக பேசுகிறார்கள், நீங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப போவதாக இருந்தால் உங்களுக்கு அந்த ஆதாரத்தை தருகிறேன். அதை உங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி இதே கேள்வியை தமிழக டிஜிபி அவர்களிடம் கேளுங்கள். தமிழ்நாடு காவல்துறை டிஜிபி கட்டுப்பாட்டில் இல்லை அவர் சைக்கிளில் செல்வதற்கும் செல்பி எடுப்பதற்கு காவல் நிலையத்துக்கு வெளியே சென்று புகைப்படம் எடுப்பதற்கும் மட்டும் தான் தமிழ்நாட்டில் டிஜிபி.

தமிழ்நாட்டில் காவல் துறையை வழிநடத்துவது திமுக மாவட்ட செயலாளர்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அந்தந்த மாவட்டத்தில் இருக்கின்ற திமுக ஐடி விங் நிர்வாகிகள் தான் அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் காவல் துறையைச் சார்ந்த எஸ்பி அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள். ஒரு நேர்மையான டிஜிபியாக இருந்தாள் தவறாக கருத்துப் பதிவு செய்தவர்கள் அனைவரும் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்காக இந்த பாரபட்சம் இதெல்லாம் அவர் கண்ணுக்கு தெரியவில்லையா.?

பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் இந்தியாவில் எங்கேவாது டுவிட்டரில் பதிவு போட்டதற்காக குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது என கூறமுடியுமா.? அதனால் புரிந்து கொள்ள வேண்டும் ஒரு லெவல் தான். இந்தியாவில் எல்லா பக்கமும் சிஆர்பிசி இருக்கு. தமிழ்நாட்டில் யாராவது தவறான பதிவு செய்தால் கூட பிற மாநிலத்தில் எப் ஐ ஆர் பதிவு செய்ய முடியும், அந்த மாநிலத்தில் உள்ளவர்களை காவல்துறையினர் கைது செய்யவும் முடியும். எல்லாதுக்கும் ஒரு எல்லை தான்,

அதனால் இதையும் தமிழக காவல்துறையும் தமிழகத்தில் ஆளுகின்ற திமுக அரசும் புரிந்துகொள்ள வேண்டும். 17 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கின்றோம், பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு, பொறுமையாக இருக்க கூடிய ஒரு கட்சியை அந்தப் பொறுமையின் எல்லையை கடக்க வைத்து விடாதீர்கள் இதுதான் நான் தமிழக அரசுக்கு எச்சரிக்கை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

டேய்…தம்பி சூர்யா ..இனி உன் படம் தியேட்டரில் ஓடாது… புரட்சி பேசும் நடிகர்கள்… மீடியா… பேடிகள் எங்கே.?