இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி பிபின் ராவத் மரணம்..! விபத்தின் பின்னணி / காரணம் என்ன ?

0
Follow on Google News

தமிழகம் குன்னூர் பகுதிக்கு வந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த முப்படைகளின் கூட்டு தளபதி ஜெனரல் பிபின் ராவத் குடும்பத்தோடு உயிரிழந்திருப்பது, தமிழக வரலாற்றில் மிகபெரிய சோக சம்பவமாக பதிவாகியுள்ளது, அந்த ஹெலிகாப்டர் கட்டுபாட்டு அறையுடன் தொடர்பினை இழந்த நிலையில் அது விபத்துக்குள்ளானது என பாரளுமன்றத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

ஏர்மார்ஷல் மன்வேந்திர சிங் தலமையில் ராணுவ விசாரணை குழு அமைக்கபட்டுள்ளது, இது இனி விசாரணையினை செய்து அறிக்கை தாக்கல் செய்யும் என பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளார். கிடைக்கும் ஆதாரங்களும் சில தரவுகளும் உயரம் குறைந்து பறந்துதான் ஹெலி விபத்தில் சிக்கியிருப்பதை சொல்கின்றன,

ஆனால் ஏன் அவ்வளவு தாழ்வாக பறந்தார்கள் கட்டுபாட்டு அறைக்கும் விமானிக்குமான கடைசி உரையாடல் என்ன எனும் தகவலெல்லாம் இன்னும் வரவில்லை ஹெலியின் கருப்புபெட்டி கைபற்றபட்டிருக்கும் நிலையில் இனி ஏர்மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் விசாரணையின் போது பல தகவல் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது.

இந்திய விமானபடையின் விசாரணை அறிக்கையில் தான் இந்த சம்பவம் எப்படி நடந்தது என தெரியவரும் என கூறபடுகிறது. இந்த சம்பவத்தில் விமானி கடைசியாக சூலூர் விமான நிலையத்தை தொடர்பு கொண்டாரா? இல்லை கோவை சிவில் சர்வீஸ் விமானத்தை தொடர்பு கொண்டாரா? கடைசியாக என்ன சொன்னார் என்பதுதான் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

இந்த ஹெலியில் 14 பேர் சென்ற நிலையில் அந்த ஹெலி வழக்கமான செங்குத்து தரையிரங்கலை செய்யமுடியாது என்றும் உயரம் மேட்டுபாளையத்தை தாண்டிய நிலையில் படிபடியாக குறைக்கபட்டு அப்படி குறைக்கபட்ட உயரத்தால் ஹெலி சிக்கலாகியிருக்கலாம் என்கின்றன முதல் கட்ட அறிக்கைகள், எம்.எம் நரவாணே வழங்கபோகும் அறிக்கைக்கு பின்னர்தான் இனி சில விவரங்கள் தெரியவரும்

இந்திய முப்படைகளின் கூட்டு தளபதி ஜெனரல் பிபின் ராவத் கோர விபத்தில் மரணம் அடைந்துள்ளது மிக பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரும் துயரத்தில் நாடு மூழ்கியுள்ளது. இந்நிலையில், விபத்தின் பின்னணி மற்றும் காரணம் என்ன ? என்பதற்கான பதிலுக்காக இந்திய தேசமே காத்திருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

ஊடகங்கள் திமுகவுக்கு பயப்படும் சூழல் ஏன்.? சாத்தான்குளத்தில் நடந்த சம்பவத்துக்கு கொந்தளித்தவர்கள் முதுகளத்தூர் சம்பவத்துக்கு அமைதியாக இருப்பது ஏன்.? பேராசிரியர் பேட்டி