ஆளுநரை சந்திக்கிறார் அண்ணாமலை..! சிறைக்கு செல்ல இருப்பது யார்.? யார்.? தெரியுமா.? பீதியில் திமுக வட்டாரங்கள்…

0
Follow on Google News

சமூக வலைதளத்தில் திமுக அரசை எதிர்த்து விமர்சனம் செய்கின்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அடக்குமுறையை கையாண்டு வருவதாக திமுக மீது பாஜக பகிரங்கமாக குற்றசாட்டுகளை முன்வைத்து வருகிறது. திமுகவை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த கிஷோர் கே சாமி, கல்யாண ராமன் ஆகியோர் குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மாரிதாஸை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து நேற்று பத்திரிகையாளர் சந்திப்பின் போது பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவை சேர்ந்தவர்கள் மீது தமிழ்நாட்டில் போடப்பட்ட தவறான பதிவுகளுக்கு தமிழகக் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்… இந்தியா முழுவதும் இருக்கும் சிஆர்பிஎஃப் போலீஸுக்கு அதுபற்றி விசாரிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. இந்தியாவின் எந்த மூலையில் இருந்தும் தமிழ் தெரிந்த ஒருவர் புகார் கொடுத்தால் அதன்மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய முடியும். இதை தமிழக காவல் துறையும், திமுக அரசும் புரிந்துகொள்ள வேண்டும் என கடுமையாக எச்சரித்தார்.

இதற்கிடையில் இன்று (டிசம்பர் 12) காலை சமூக ஊடகங்களில் கருத்து சுதந்திரத்துக்காக எதிராக திமுக அரசு பதிவு செய்து வரும் வழக்குகளை எதிர்த்து போராட்டம் நடத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளது. கமலாலயத்தில் இன்று இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளும் அண்ணாமலை அதையடுத்து தமிழக ஆளுநரை சந்திக்கிறார். ஆளுநரிடம் திமுக, திகவினர் பிபின் ராவத் மரணம் பற்றி பதிவு செய்த பல்வேறு கருத்துகளைத் தொகுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்க இருக்கிறார்.

இந்நிலையில் நேற்று பாஜக வழக்கறிஞர் குழுவினரை அவசரமாக சந்தித்த அண்ணாமலை, திமுகவினர் சமூக தளங்களில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு தேச விரோத கருத்தையும் ஆவணப்படுத்துங்கள்’ என்று உத்தரவிட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து பாஜக ஐடி பிரிவு நிர்வாகிகள் உடன் இணைந்து பாஜக வழக்கறிஞர் பிரிவினர் திமுகவை சேர்ந்தவர்கள்பதிவுகளை அவணப்படுத்தப்பட்டு பட்டியலை தயார் செய்யப்பட்டுள்ளது.

அதில் பாஜக பெண் நிர்வாகிகளை தொடர்ந்து பாலியல் ரீதியாக பல பதிவிட்ட திமுக ஐடி விங் நிர்வாகி ஜெயச்சந்திரன், இந்தியா ராணுவம் மற்றும் பிரதமருக்கு எதிராக சர்ச்சை குறியா வகையில் பேசிய சுந்தரவல்லி வீடியோ, மேலும் சமீபத்தில் பிபின் ராவத் மரணம் குறித்து தவறான கருத்துக்களை பதிவு செய்திருந்த திமுக நிர்வாகி மற்றும் திமுக ஆதரவாளர்கள் பட்டியலை பாஜக வழக்கறிஞர் பிரிவு தயார் செய்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

டேய்…தம்பி சூர்யா ..இனி உன் படம் தியேட்டரில் ஓடாது… புரட்சி பேசும் நடிகர்கள்… மீடியா… பேடிகள் எங்கே.?