முதல் வாரத்தில் 50 கோடி வசூல்… சாதனை நிகழ்த்திய மாநாடு!

0
Follow on Google News

மாநாடு படத்தின் முதல் ஒரு வார கலெக்ஷன் நிலவரம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.
சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா மற்றும் எஸ் ஏ சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்ட இந்த படம் பல பிரச்சனைகளைத் தாண்டி நவம்பர் 25 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றி படத்தில் தமிழ் சினிமா உலகினரையே ஆச்சர்யப்பட வைத்துள்ளது. முதல் இரு நாட்களில் மட்டும் 14 கோடி ரூபாய் வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளரால் சொல்லப்பட்டது.

மேலும் நான்காம் நாளுக்குப் பிறகு விநியோகஸ்தர்கள் மற்றும் அனைத்துத் தரப்பினருக்கும் லாபத்தைக் கொடுக்கும் படமாக அமைந்தது. இன்று இரண்டாம் வாரத்தில் அடியெடுத்து வைக்கும் நிலையில் முதல் வாரத்தில் உலகம் முழுவதும் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி செய்திருந்தால் அது சிம்புவின் சினிமா கேரியரில் உச்சம் தொட்ட வசூலாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.