நீண்ட இழுபறிக்குப் பின் ரிலீஸாக உள்ள எஃப் ஐ ஆர் படம்!

0
Follow on Google News

விஷ்ணு விஷால் நடிப்பில் எப் ஐ ஆர் திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு விஷால் ஒரு மாஸ் ஹீரோவாக உருவாகி வந்து கொண்டு இருந்தாலும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை அதிகளவில் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அப்படி அவர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம்தான் எப் ஐ ஆர். இந்த படத்தின் போஸ்டர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகி கவனத்தை ஈர்த்தது.இந்த படத்தில் கௌதம் மேனன், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார்.

கொரோனா உள்ளிட்ட காரணங்களால் இந்த படத்தின் ரிலிஸ் பாதிக்கப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக ஓடிடியில் ரிலிஸ் ஆகும் என தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் இப்போது படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.