இனி என்னை தல என்று அழைக்க வேண்டாம்… அஜித் அறிக்கை!

0
Follow on Google News

நடிகர் அஜித்குமார் தன்னை இனிமேல் தல என்றோ வேறு ஒரு பட்டப் பெயர் சொல்லி அழைத்தோ அழைக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். முன்னணி நடிகர்களில் அஜித் எப்போதுமே கொஞ்சம் வித்தியாசமாக செயல்படுபவர். தன்னுடைய ரசிகர் மன்றங்களை கலைத்தது முதல் பல நடிகர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருபவர்.

இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பு அவருக்கு பாராட்டுகளை குவித்து வருகிறது. தன்னுடைய மக்கள் தொடர்பாளர் மூலமாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘மதிப்பிற்குரிய ஊடகங்கள், பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்கு.. என்னை பற்றி ஏதாவது எழுதும்போது எனது பெயரை அஜித், அஜித்குமார் அல்லது ஏ.கே என்று குறிப்பிடுங்கள்.

எனது பெயர் முன்னால் “தல” மற்றும் ஏதேனும் பட்டப் பெயர்களை சேர்க்க வேண்டாம். உங்கள் அனைவரது வாழ்விலும் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும், மன அமைதியும் நிலவட்டும்” எனக் கூறியுள்ளார்.