இன்றைய (09-09-2021) ராசி பலன்கள்.

0
Follow on Google News

மேஷம்
உறவினர்களிடம் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபார பணிகளில் வேலையாட்களை மாற்றுவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். வேகத்தைவிட விவேகத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அஸ்வினி : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
பரணி : பொறுப்புகள் மேம்படும்.
கிருத்திகை : விவேகம் வேண்டும்.

ரிஷபம்
பூர்வீகம் தொடர்பான பிரச்சனைகளை புதிய கோணத்தில் சிந்தித்து முடிவெடுப்பீர்கள். பிள்ளைகளுக்கு சுபகாரியங்களை செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். தாய்வழி உறவுகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோக பணிகளில் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். மறைமுகமாக இருந்துவந்த தடைகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.
ரோகிணி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
மிருகசீரிஷம் : வெற்றிகரமான நாள்.

மிதுனம்
வாக்கு சாதுர்யத்தின் மூலம் லாபம் அடைவீர்கள். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். உறவினர்களிடம் மதிப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனை சார்ந்த செயல்பாடுகளில் மேன்மை ஏற்படும். மாணவர்களுக்கு மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : லாபம் உண்டாகும்.
திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
புனர்பூசம் : தெளிவு பிறக்கும்.

கடகம்
சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். காது தொடர்பான இன்னல்கள் குறையும். கல்வி தொடர்பான பணிகளில் மாணவர்களுக்கு மாற்றமான சூழ்நிலைகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
புனர்பூசம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
பூசம் : துரிதம் உண்டாகும்.
ஆயில்யம் : இன்னல்கள் குறையும்.

சிம்மம்
குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நட்பு வட்டங்கள் விரிவடையும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். புதுவிதமான அனுபவத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : கலகலப்பான நாள்.
பூரம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
உத்திரம் : முதலீடுகள் அதிகரிக்கும்.

கன்னி
எண்ணிய செயல்கள் நிறைவேற காலதாமதம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் நன்மைகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : காலதாமதம் ஏற்படும்.
அஸ்தம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.

துலாம்
வியாபார அபிவிருத்திக்கான சிந்தனைகள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவுகள் கிடைக்கும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மற்றும் பொறுப்புகள் குறையும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
சித்திரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.
சுவாதி : நெருக்கடிகள் குறையும்.
விசாகம் : அனுகூலமான நாள்.

விருச்சிகம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடிவடையும். உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார பணிகளில் நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
விசாகம் : நெருக்கம் அதிகரிக்கும்.
அனுஷம் : சாதகமான நாள்.
கேட்டை : ஆரோக்கியம் மேம்படும்.

தனுசு
எதிர்காலம் தொடர்பான செயல்களை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோக பணிகளில் மாற்றங்களும், எதிர்பாராத பயணங்களும் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்
மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : புரிதல் மேம்படும்.
உத்திராடம் : மாற்றங்கள் உண்டாகும்.

மகரம்
குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபார பணிகளில் நண்பர்களின் ஆலோசனைகள் மூலம் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் அறிமுகமும், ஆதரவும் கிடைக்கும். புதிய விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
திருவோணம் : ஈடுபாடு உண்டாகும்.
அவிட்டம் : அறிமுகம் கிடைக்கும்.

கும்பம்
மனதில் தோன்றும் விதண்டாவாத சிந்தனைகளின் மூலம் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். முக்கியமான கோப்புகளில் கவனத்துடன் கையாளவும். உத்தியோகத்தில் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். கடன் தொடர்பான செயல்பாடுகளின் மூலம் மனவருத்தங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் ஏற்படும்
சதயம் : மனவருத்தங்கள் உண்டாகும்.
பூரட்டாதி : விழிப்புணர்வு வேண்டும்.

மீனம்
நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வியாபார பணிகளில் தனவரவுகள் மேம்படும். கலை சார்ந்த துறையில் இருப்பவர்கள் சில நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
பூரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.
உத்திரட்டாதி : தனவரவுகள் மேம்படும்.
ரேவதி : நுட்பங்களை அறிவீர்கள்.