தமிழகத்தில் மறைக்கபட்ட வரலாறு.! அழுத்தமாக சொல்லிக்கொண்டே இருக்கும் ராமநாதபுரம் கீழதூவல் கல்வெட்டு..

0
Follow on Google News

தமிழகத்தில் மறைக்கபட்ட வரலாறுகள் நிரம்ப உண்டு, அதில் ஒன்றுதான் ராமநாதபுரம் பக்கம் மவுன சாட்சியாக நிற்கின்றது. ஆம், இந்த மண்ணில் வ.உ.சி, பாரதிக்கு பின், வாஞ்சிக்கு பின், நீலகண்ட பிரமச்சாரி போன்றோர் வழியில் மானமும் அறிவும் இந்து அபிமானமும் தேசபக்தியும் கொண்ட ஒருவர் தோன்றினார்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் எனும் மிகபெரிய ஞானவீரமகனார் அவர், சுத்தமான தமிழ்வீரனும், இந்து பக்தியும் கொண்ட அவர் பாண்டிய மன்னர்களின் பழைய வீரத்தின் நிகழ்வடிவாய் இருந்தார், மிகசிறந்த முருகபக்தரான அவருக்கு தேசாபிமானம் நிறைய இருந்தது.

அவருக்கென ஒரு கூட்டமும் சேர்ந்தது, அவர் நேதாஜியின் அபிமானியாய் இருந்தார். 1930களில் அவருக்கு இரு எதிரிகள் இருந்தனர், ஒன்று காந்தி காங்கிரஸ் இன்னொன்று நாத்திகம் பேச கூடிய திராவிடம் , இந்த இருவருடனும் தனியாக போராடினார் தேவர்,நேதாஜியுடன் தோளுக்கு தோள் நின்று, ஆளோடு ஆள் நின்று போராடினார் தேவர், தேவர்பெருமான் எல்லா போராட்டங்களை நடத்தியது போலவே மதுரை ஆலயத்தில் தாழ்த்தபட்டோர் நுழையவும் போராடி வென்றார்.

1947ல் சுதந்திரம் வாங்கியபின் காங்கிரஸை பகிரங்கமாக கண்டிக்க தொடங்கினார் தேவர், ஒருவகையில் அவர் ராஜாஜியினை ஆதரித்தார், கற்ற ஒருவர், பன்மொழி தெரிந்த ஒருவர், ராஜாஜி போன்ற ஆளுமைதான் தமிழக முதல்வராக அமரவேண்டும், கல்லாதவர்கள் அமர்ந்தால் பலவகை சிக்கல் என்றார் தேவர். காமராஜரோடு எமக்கு எந்த பகையுமில்லை, காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை நான் சாடுகின்றேன், நேரு எனும் திறமையில்லா பிரதமரை சாடுகின்றேனே அன்றி, அதுவும் தேசாபிமானம் எனும் ஒரே சிந்தனையில் சாடுகின்றேனே அன்றி இந்தியனாக காமராஜரை இன்றும் மதிக்கின்றேன்” என அவர் சொன்னதெல்லாம் வரலாறு.

அதுவரை இல்லா புது புது சிக்கலெல்லாம் 1950க்கு பின் முளைத்தன‌, அதுவரை அந்த ராமநாதபுரம் பக்கம் சாதிகலவரமில்லை, தேவர் சமூகத்தினரும் பட்டியல் சமூகத்தினரும் அடித்து கொண்டதில்லை, அந்த மறவர்பூமி நாயக்கர், தேவர், செட்டியார், இஸ்லாமியர், தலித் , நாடார் என எல்லா சாதி மக்களும் இணைந்துவாழும் பகுதியாகத்தான் இருந்தது. ஆனால் சுதந்திரம் பெற்று அதுவும் காங்கிரஸ் தேவரிடம் தோற்றுகொண்டே இருந்தபொழுது மட்டும் எப்படி சாதி கலவரம் உண்டாயிற்று என்பதுதான் தெரியவில்லை என திடீரென புது புது குரல்கள் எழும்பின.

பற்பல சர்ச்சைகள் நடந்துகொண்டிருந்தபொழுதே இம்மானுவேல் சேகரன் கொல்லபட்டார், அதே நேரம் அதே கொலையில் தேவரோடு ஒரு தாழ்த்தபட்டவரும் கைதானார். தேவருக்கு வைக்கபட்ட இருமுனை தாக்குதல் இது, ஒரு பரிசுத்தமான இந்துவாக அவரை திராவிட இயக்கமும், ஒரு சுத்தமான தேசியவாதியாக காங்கிரசும் அவரை குறிவைத்து அவரை மக்களிடம் இருந்து பிரிக்க பல சதிகளை செய்தன‌. அதில்தான் அந்த 1957 கலவரமும் அவர் மேலான கொலைசதியும் இன்னும் பலவும் தொடுக்கபட்டன.

அவருக்கு ஆதரவானவர்கள் எந்த விசாரணையுமின்றி கீழதூவலில் இன்று தாலிபன்கள் சுடுவதை போல் சுட்டு கொல்லபட்டார்கள், ஆம், 1957ல் நடந்த அந்த படுகொலை தேவர்மேல் பலருக்கு இருந்த வன்மத்தின் வெளிப்பாடு, ஒரு உண்மையான தேசாபிமானி எப்படியெல்லாம் பழிவாங்கபடுவான் என்பதற்கான சான்று. தேவர் பெருமானின் வரலாற்று பக்கத்தில் ஏகபட்ட மறைக்கபட்ட சதிகள் உண்டு வெள்ளையன் காலத்தில் அவனோடு நேருக்கு நேர் நின்ற சிங்கத்தை உள்ளூர் வெள்ளைய கைகூலிகள் எப்படியெல்லாம் களங்கபடுத்தி அவரை அகற்ற முயன்றனர் என்பதற்கு சான்றாக கீழதூவல் கல்வெட்டு நிற்கின்றது
அந்த கல்வெட்டே வரலாற்றை சொல்கின்றது, அழுத்தமாக எக்காலமும் சொல்லிகொண்டே இருக்கின்றது. :- எழுத்தாளர், ஸ்டான்லி ராஜன்