வட இந்தியர்கள் கடும் கொந்தளிப்பு… நடிகர் சித்தார்த் விளம்பர பட வாய்ப்புகள் பறிபோகிறது.. .சோத்துக்கு என்ன செய்ய போகிறார் தெரியுமா.?

0
Follow on Google News

தமிழில் பிரமாண்ட இயக்குனராக வலம் வரும் இயக்குனர் சங்கர் அறிமுக இயக்கத்தில் வெளியான ஜென்டில் மேன் தொடங்கி காதலன், இந்தியன், ஜீன்ஸ் , முதல்வன் என தொடர்ந்து மெகா ஹிட் படங்களை கொடுத்து வந்த சங்கர் நடிகர் சித்தார்த் அறிமுகம் செய்து அவர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படம் படு தோல்வியை அடைந்ததது. சங்கர் இயக்கத்தில் முதல் தோல்வி படம் இது. இதனை தொடர்ந்து தமிழில் சித்தார்த் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஆயுத எழுத்து படம் தோல்வியை தழுவியது.

மிக பெரிய இரண்டு இயக்குனர் படத்தில் சித்தார்த் நடித்த இரண்டு படமும் தோல்வியை தழுவியதை தொடர்ந்து சித்தார்த் ராசி இல்லாத நடிகர் என முத்திரை குத்தப்பட்டு தமிழ் சினிமாவில் இருந்து துரத்தியடிக்கப்பட்டார். இதன் பின் தெலுங்கு படங்களில் நடித்து வந்த சித்தார்த் அங்கும் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இதன் பின்பு சில வருடங்கள் கழித்து தமிழில் கிடைக்கும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சித்தார்த்.

இந்நிலையில் பட வாய்ப்பில்லாத சினிமா துறையை சேர்ந்தவர்கள் அரசியல் கருத்து தெரிவிப்பது போன்று நடிகர் சித்தார்த் , பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்து எதிர் விமர்சனங்கள் மூலம் தனது இருப்பை காட்டி கொண்டு வந்தார் ஆனால், பல நேரங்களில் அநாகரிகமாக சித்தார்த் விமர்சனம் செய்தது கடும் சர்ச்சையாக வெடித்தது. ஆனால் தொடர்ந்து தமிழக அரசியலில் திமுகவுக்கு மறைமுக ஆதரவாகவும், நேரடியாக பாஜகவுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தார் சித்தார்த்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யானத்தை கண்ணத்தில் அறைவேன் என சித்தார்த் குறிப்பிட்ட சம்பவம் இந்தியா முழுவதும் கடும் எதிப்பு கிளம்பியது. இந்த விவகாரத்தில் பாஜக சார்பில் சித்தார்த் மீது வழக்கு கூட பதிவு செய்யப்பட்டது. இதனிடையே திமுக ஆட்சிக்கு வந்த பின் அரசியல் கருத்து தெரிவிப்பதில் சற்று மௌனமாக இருந்து வந்த சித்தார்த் சமீபத்தில் அநாகரிகமாக கருத்து தெரிவித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில் சினிமாவில் தான் வாய்ப்பு கிடைக்கவில்லை என விளம்பர படங்களில் நடிக்க முடிவு செய்த சித்தார்த், சிந்தால் சோப்பு விளம்பரத்தில் சமீபத்தில் நடித்தார். இதற்கு சிந்தால் நிறுவனத்துக்கு எதிராக வட இந்தியர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை கன்னத்தில் அறைவேன் என பேசிய சித்தார்த் விளம்பரத்தில் நடிக்கும் சிந்தால் சோப்பை புறக்கணிப்போம் என வட இந்தியர்கள் தங்கள் எதிப்பை தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து தற்போது ஒப்பந்தம் செய்துவிட்டதால் வேறு வழியில்லை ஒப்பந்தம் தேதி முடிந்ததும் இனி நடிகர் சித்தார்த் தங்கள் நிறுவன விளம்பர படங்களில் நடிக்காது என முடிவு செய்துள்ளதாக கூறபடுகிறது. மேலும் சித்தார்த்துக்கு கடும் எதிர்ப்பு உள்ள நிலையில் விளம்பர வாய்ப்புகள் முழுமையாக அவருக்கு பறிபோக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.