பூமிகா படம் என்ன சொல்கிறது… ஐஸ்வர்யா ராஜேஷ் வரவேற்பைப் கொடுத்துள்ளது…

0
Follow on Google News

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த பூமிகா படம் இன்று பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் இன்று மதியம் 3மணி அளவில் நேரடியாக ஒளிபரப்பானது. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது கணவர் நீலகிரி மலைப்பகுதியில் உள்ள ஒரு இடத்தை கான்ட்ராக்ட் எடுத்துள்ளார். இதற்காக அவர் மற்றும் அவர் கணவர், தங்கை, மற்றும் பெண் தோழி, அவர்களுடைய குழந்தையுடன் அங்கு செல்கின்றனர்.

அங்கு இருக்கும் பழைய பள்ளி கூடத்தில் தங்குகிறார்கள். அன்று இரவு அங்கு சில அமானுஷ்ய விஷயங்கள் நடக்கிறது. இதையடுத்து அங்கு இருந்து தப்பிக்க முயற்சி செய்தாலும் முடியவில்லை. பிறகு அங்கு இருந்து எப்படி தப்பி வருகிறார்கள். அந்த அமானுஷ்ய சக்தி யார். என்ன வென்று கதை சுவாரஸ்யமாக நிகழ்கிறது. ஒரு திகில் படம் என்றாலும் அந்த படத்தில் வரும் பின்னணி இசை நம்மை கொஞ்சம் பயமுறுத்துகிறது.

புதிய கதையில் தமிழில் இப்படி ஒரு ஹாரர் & திரில்லர் படத்தை இயக்குநர் ரதீந்திரன் ஆர்.பிரசாத்தின் பிரமாதமாக இயக்கியுள்ளார். இந்த படத்தை பிரித்திவ் சந்திரசேகர் இசையில் உருவாகியுள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு ஏற்கனவே முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம் திட்டம் இரண்டு என்ற படம் வரவேற்பை பெற்ற நிலையில் .

இந்த பூமிகா படமும் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு நல்ல வாய்ப்பு உருவாக்கியுள்ளனர். ஸ்டோன் பென்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஃபேஷன் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் பெரிய அளவில் வெற்றியை சந்தித்து இருக்கும்.