இன்றைய (16-08-2021) ராசி பலன்கள்.

0
Follow on Google News

மேஷம்
தொழில் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் பழைய நினைவுகளின் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அஸ்வினி : கவனம் வேண்டும்.
பரணி : சேமிப்புகள் குறையும்.
கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

ரிஷபம்
வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த மந்தநிலை குறையும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற பாராட்டுகளும், மதிப்புகளும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையுடன் சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். தந்தை வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : மந்தநிலை குறையும்.
ரோகிணி : ஆதாயம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : பாராட்டுகள் கிடைக்கும்.

மிதுனம்
இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். போட்டித்தேர்வுகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.
திருவாதிரை : அனுபவம் உண்டாகும்.
புனர்பூசம் : சிந்தனைகள் மேம்படும்.

கடகம்
நண்பர்களின் சந்திப்பு மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். நீண்ட நாளாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த இன்னல்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
புனர்பூசம் : தீர்வு கிடைக்கும்.
பூசம் : ஆதாயமான நாள்.
ஆயில்யம் : இன்னல்கள் குறையும்.

சிம்மம்
எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். நண்பர்களிடம் தேவையற்ற கருத்துக்கள் பரிமாறுவதை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். வாழ்க்கைத்துணைவரிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். பயணங்கள் தொடர்பான விஷயங்களில் மாற்றமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகம் : உதவிகள் கிடைக்கும்.
பூரம் : விழிப்புணர்வு வேண்டும்.
உத்திரம் : மாற்றமான நாள்.

கன்னி
மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உத்தியோகத்தில் சில நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மனை தொடர்பான விஷயங்களில் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் கவனத்துடன் செயல்படவும். இளைய உடன்பிறப்புகளிடம் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் தேவையற்ற கருத்துக்கள் பரிமாறி கொள்வதை குறைத்துக்கொள்வது மேன்மையை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
அஸ்தம் : லாபகரமான நாள்.
சித்திரை : அனுசரித்து செல்லவும்.

துலாம்
உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வாகனங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எழுத்து தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : ஈடுபாடு உண்டாகும்.
விசாகம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

விருச்சிகம்
புதிய முயற்சிகள் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் அமையும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தேவையற்ற சிந்தனைகளின் மூலம் மனதில் அவ்வப்போது சலனங்கள் ஏற்பட்டு நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
விசாகம் : சிந்தனைகள் மேம்படும்.
அனுஷம் : திறமைகள் வெளிப்படும்.
கேட்டை : ஆர்வம் அதிகரிக்கும்.

தனுசு
புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உலகம் பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். சிறு வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : அறிமுகம் உண்டாகும்.
பூராடம் : புரிதல் மேம்படும்.
உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

மகரம்
வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பார்த்திருந்த சுபச்செய்திகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். வாழ்க்கைத்துணைவரிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : லாபகரமான நாள்.
திருவோணம் : பொறுமை வேண்டும்.
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

கும்பம்
மனதில் பழைய சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றமான தருணங்கள் உண்டாகும். குடும்ப பெரியோர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக்கொள்ளவும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : மாற்றமான நாள்.
சதயம் : விவாதங்களை தவிர்க்கவும்.
பூரட்டாதி : சாதகமான நாள்.

மீனம்
தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். இணையம் சார்ந்த பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : சேமிப்புகள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : லாபகரமான நாள்.
ரேவதி : கருத்து வேறுபாடுகள் குறையும்.