எங்களால் ஒன்றுமே செய்ய முடியாது….. இதை சொல்ல தான் வெள்ளை அறிக்கை வெளியாகிறதா.?

0
Follow on Google News

தமிழகத்தில் 2021-22 நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இந்த மாதம் 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, ஆகஸ்ட் 9 ஆம் தேதி தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலையின் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். வெள்ளை அறிக்கையில் இடம் பெறவுள்ள அம்சங்கள் குறித்து பல வித எதிர்பார்ப்புகள் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

வெள்ளை அறிக்கை என்பது அரசின் முந்தைய அரசின் நிதி நிலையையும், எதிர்கால திட்டங்களையும் மக்களுக்கு முன்னால் வெளிப்படையாகத் தெரிவிக்கும் ஒரு அறிக்கையாகும். அரசாங்கம் மட்டுமல்லாமல், நிறுவனம், அமைப்பு, கூட்டமைப்பு ஆகியவை ஒரு பிரச்சனையை சரி செய்ய எடுத்திருக்கும் முடிவுகள் மற்றும் தீர்மானங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் வெள்ளை அறிக்கை பயன்படுகிறது. பொதுவாக, பிரச்சனை மிகுந்த ஒரு விவகாரத்தைப் பற்றி புரிந்து கொள்ளவும், அந்த பிரச்சனையை தீர்க்கவும், அது பற்றி முடிவெடுக்கவும் வெள்ளை அறிக்கை வழி செய்கிறது.

இந்நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு முன் திமுக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000, பெட்ரோல் விலை ரூ.5 மற்றும் டீசல் விலை ரூ.4 குறைக்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் அள்ளி வீசியது, இதனை தொடர்ந்து நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்து மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில் தேர்தலில் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு என பொதுமக்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து தமிழக அரசு சுமார் 5 லட்சம் கோடி கடனில் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், வெள்ளை அறிக்கையில் சுமார் 9 லட்சம் கோடி தமிழக அரசு கடனில் இருப்பதாக தெரியவரும் என கூறப்படுகிறது, தமிழக அரசின் நிதிநிலை மிகவும் மோசமாக இருப்பதை சுட்டி காட்டுவதற்காக தான் வெள்ளை அறிக்கையை திமுக அரசு வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறபடுகிறது.

இந்நிலையில் கடந்த பத்து ஆண்டு அதிமுக ஆட்சியின் காரணமாக நிதிநிலை மிக மோசமாக இருப்பதை சுட்டி காட்டி, இதற்கு முன் இருந்த அதிமுக ஆட்சியின் மீது பழியை தூக்கி போட்டுவிட்டு, தமிழக நிதி நிலை மிக மோசமாக இருப்பதனால் , தேர்தலில் கொடுத்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 , மற்றும் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு போன்றவைக்கு சாத்தியமில்லை என திமுக அரசு கை விரித்து காண்பிக்கவே வெள்ளை அறிக்கை வெளியாகிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.