SPB சொல்ல சொல்ல கேட்காமல் சிக்கலில் சிக்கிய மகன் SPB சரண்… தனது இறுதி காலத்தில் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான SPB..! மகன் என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

தனது 20 வயதில் சினிமாவில் பாடல் பாட தொடங்கிய பின்னணி பாடகர் SP பாலசுப்பிரமணியம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், பெங்காளி உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார். தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுக்கு பின்னணி பாடல்கள் பாடிய எஸ்.பி.பி ராசியான பாடகராக தமிழ் சினிமாவில் பார்க்கப்பட்டார்.

உச்ச நடிகரான ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் அறிமுக பாடல்களை தொடர்ந்து பல வருடங்களாக பாடியவர் எஸ்.பி.பி. இப்படி இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த ஜாம்பவான் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சுமார் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி அவர் சம்பாரித்த ரசிகர்கள் எப்படி அதிகமோ அதே போன்று அவர் பாடல் பாடி சம்பாரித்த சொத்துக்களும் அதிகம், அதே போன்று பல இசை கச்சேரிகள் நடத்தியும் சம்பாரித்துள்ளார்.

பின்னணி பாடகர் எஸ்.பி.பி மகன் எஸ்.பி.பி.சரண் சினிமாவில் நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுப்பவராகவும் சில படங்களில் பாடலும் ஆரம்பத்தில் பாடி வந்துள்ளார். இதே போன்று தமிழ், தெலுங்கு , கன்னட மொழி படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த எஸ்.பி.பி. சரண் தொலைக்காட்சி தொடர்களிலும் நடடித்து வந்துள்ளார். இவ்வாறு சென்று கொண்டிருந்த அவர் வாழ்க்கையில் திடிரென தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார் எஸ்.பி.பி.சரண்.

இயக்குனர் சமுத்திரக்கனி அறிமுக இயக்கத்தில் முதல் முதலாக உன்னை சரணடைத்தேன் என்கிற படத்தை தயாரித்து பெரும் நட்டம் ஏற்பட்டது. இதன் பின்பும் அவர் தயாரிப்பு துறையை விடுவதாக இல்லை, மகனின் பிடிவாத குணத்தால் அவருடைய தந்தை எஸ்.பி.பி ஏதும் செல்லாமல் மகன் ஏதோ சாதிக்க வேண்டும் என்கிற நோக்கில் செயல்படுகிறான் என நினைத்து மகனுக்கு குறுக்கே நிற்காமல் சரண் இஷ்டம் போல் செயல்படவிட்டுள்ளார் எஸ்.பி.பி.

இந்நிலையில், தெலுங்கில் வசூலை வாரி அள்ளி குவித்த மழை படத்தை நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை ஷ்ரேயா நடிப்பில் தமிழில் தனது தயாரிப்பின் மூலம் ரீமேக் செய்து வெளியிட்டு பெரும் நட்டம் எஸ்.பி.பி.சரணுக்கு ஏற்பட்டது. அதே போன்று சென்னை 600028 திரைப்படம் இவரின் தயாரிப்பில் ஓரளவு வெற்றி பெற்றாலும், அடுத்தடுத்து எஸ்.பி.பி சரண் தயாரிப்பில் வெளியான குங்கும பூவும் கொஞ்சி புறாவும், நாணயம், ஆரண்ய காண்டம், திருடன் போலீஸ், மூன்றே மூன்று வார்த்தை என எஸ்.பி.பி.சரண் தயாரிப்பில் வெளியான அணைத்து படங்களும் படு தோல்வி அடைந்துள்ளது.

ஆனால் முதல் இரண்டு படம் தோல்வியை சந்தித்த போதே நமக்கு தயாரிப்பு தொழில் சரி வராது அதனால் படம் தயாரிப்பதை விட்டு விடு என தந்தை எஸ்.பி.பி மகன் எஸ்.பி.பி.சரணுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் ஆனால் தொடர்ந்து படம் தயாரிப்பில் ஈடுபட்டு பெரும் கடனாளியான எஸ்.பி.பி சரண் தனது தந்தை பாடல் பாடி சென்னை மற்றும் ஹைத்ராபாத்தில் சம்பாரித்த பெரும்பாலான சொத்துக்களை விற்று கடனை கட்டி மீண்டு வந்துள்ளார்.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார் எஸ்.பி.பி. இந்நிலையில் 2016க்கு பின் தயாரிப்பு நிறுவனத்தை மூடிவிட்டு தனது தந்தை எஸ்.பி.பியை வைத்து கச்சேரி நடத்தி சம்பாரிக்க தொடங்கினர் எஸ்.பி.பி.சரண் ஆனால் கடந்த வருடம் கொரோனா தொற்றின் காரணமாக எஸ்.பி.பி மரணம் அடைந்த பின் பொருளாதாரத்தில் மிக பெரிய நெருக்கடியை சந்தித்த எஸ்.பி.பி.சரண் தற்போது கச்சேரிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பளராகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடக்கும் பாடல் போட்டிகளில் நடுவராகவும் இருந்து சம்பாரித்து அன்றாட வாழ்க்கையை எஸ்.பி.பி.சரண் நடத்தி வருவதாக கூறபடுகிறது.