தாலி கயிறு பெண்களுக்கு கழுத்தில் வலி ஏற்படுகிறதா.? அதை எதிர்த்து வழக்கா.? கவிஞர் தாமரையின் கருத்துக்கு தரமான பதிலடி…

0
Follow on Google News

மாடுகளின் மூக்கு சதையில் துளையிட்டு மூக்கணாங்கயிறு போடப்படுவதால் அவை துன்புறுத்தப் படுவதாக மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போட அனுமதிக்கும் சட்டப்பிரிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து திமுக திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி கூறுகையில்.

மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடாமல் காது குத்தி தோடும், மூக்குத்தியுமா அணிவிக்க முடியும்?
நீதிமன்றங்களின் நேரத்தை வீணடிப்பதற்காகவும், அதன் முக்கியத்துவத்தை கேள்விக்குறியாக்கும் வகையிலும் தொடரப்படும் இது போன்ற வழக்குகளை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், நேரத்தை வீணடிப்பதற்காக அவர்களுக்கு அபராதமும் விதித்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

7000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காட்டு விலங்குகளாக இருந்த மாடுகள், நாய்கள் என சில உயிரினங்களை வீட்டு விலங்குகளாக பழக்கப்படுத்தி அதனை நன்முறையில் பேணிப் பாதுகாத்து வரும் பாரம்பரிய பண்பாடு கொண்டவர்கள் தமிழர்கள். ஆனால், சமீப காலங்களாக மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடக்கூடாது, லாடம் அடித்தல் கூடாது என்று வழக்கத்தில் இல்லாதவற்றை, நடைமுறைக்கு ஆகாதவற்றைக் கண்டுபிடித்து இது போன்று புதிது புதிதான செய்திகளை பரப்பி வருகிறார்கள்.

இவ்வாறு செயல்படுபவர்களின் பின்னணி, அவர்களின் உள்நோக்கம் ஆகியவற்றை நீதிமன்றங்களும், மக்களாகிய நாமும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என கார்த்திகேய சிவசேனாதிபதி தெரிவித்திருந்தார். இதற்கு பிரபல திரைப்பட பெண் பாடலாசிரியர் கவிஞர் தாமரை தனது முகநூல் பக்கத்தில் காத்திகேய சிவசேனாதிபதி கருத்துக்கு பதிலளிக்கும் விதத்தில், மூக்கணாங்கயிறு போடுவது மாடுகளுக்குத் துன்பம்தான் என்றும்.

மேலும் அது அவற்றை வதைப்பதுதான். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பது சரியானதுதான் . இதில் உள்நோக்கம் கற்பிப்பது, தேடுவது எல்லாம் சுயநலமே . மத்திய மாநில அரசுகள் விலங்குரிமைப் பார்வையில் இந்தப் பிரச்சினையை அணுகும் காலம் வந்து விட்டது என கவிஞர் தாமரை தெரிவித்திருந்தார்.இதற்கு வலைதளவாசி ஒருவர், பெண்களுக்கு கழுத்தில் தாலிக் கயிறு/சங்கிலி கூட வலிக்கும் என்று மேற்கத்திய நாடுகளில் பெண்கள் யாரும் போடுவதில்லை. மோதிரம் மட்டும்தான். இதற்கு யாரும் வழக்கு தொடர வில்லையா இன்னும்? என தாமரைக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.