சாவதினாலேயே ஒருவர் ‘புனித’ராகி விடமாட்டார், செத்தாலும் அயோக்கியன் அயோக்கியனே..! கவிஞர் தாமரை கடும் கோபம்.. ஏன் தெரியுமா.?

0
Follow on Google News

கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம் அன்று, சமூக வலைதளத்தில் தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் தாமரை பதிவு செய்த பதிவு ஓன்று அதிகம் பகிரப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பதிவில் சாவதினாலேயே ஒருவர் ‘புனித’ராகி விடமாட்டார். செத்தவர்களை விமர்சிப்பதில்லை என்பது தமிழர் நன்மரபு! எனினும் மரபுகளுக்கும் காலாவதி உண்டு ; காலத்துக்கேற்ற மாற்றம் உண்டு.

செத்தாலும் அயோக்கியன் அயோக்கியனே என்று சொல்லப் பழகுவோம். செத்தாலும் அயோக்கியன் புனிதனாக முடியாது என்பதைப் புது மரபாக்குவோம் என கவிஞர் தாமரை எப்போதே வேறு யாருக்கோ பதிவு செய்திருந்தது கருணாநிதி நினைவு தினம் அன்று அதிகமாக சமூக வலைதளத்தில் பகிரப்பட்டதை தொடர்ந்து அந்த சர்ச்சைக்குரிய பதிவுக்கு விளக்கம் கொடுத்துள்ளார் தாமரை அதில் அவர் தெரிவித்ததாவது.

எப்போதோ யாருக்கோ வேறொரு இடம் பொருள் ஏவலில் எழுதப்பட்ட ஒரு பத்தி ஏதோ இன்று எழுதப்பட்டது போல் சுற்றி வருகிறது. அதையும் உடனே நம்பி, அடுத்தடுத்து பகிர்ந்து, அதையொட்டி வாதப்பிரதிவாதங்களும் கிளம்பி, என்னைக் கரித்துக் கொட்டும் ஆடிப் பண்டிகையும் ஆரம்பித்தாயிற்று. நான் திரைப்பிரபலம் என்பதால் என்னைச் சுட்டுவதும் திட்டுவதும் எளிதாக இருக்கிறது. நான் நேரடி அரசியலிலிருந்தும் அரசியல் நிகழ்வுகளில் பங்கு பெறுவதிலிருந்தும் அரசியல் விமர்சனம் செய்வதிலிருந்தும் விலகிப் பல்லாண்டுகள் ஆகிவிட்டன என்பதறிக !.

நான் எந்தக் கட்சி அரசியலிலும் இல்லை. அரிதாகவே, தேவைப்படும் இடத்தில் மட்டும் தமிழ்மொழி, இனவுணர்வு சார்ந்து கருத்தறிவிக்கிறேன். இன்று வலம்வரும் ‘இறந்தவர் பற்றிய’ பத்தி இன்றைக்கு எழுதப்பட்டதல்ல. எப்போது யாருக்காக எழுதப்பட்டது என்று நினைவில் இல்லை. அவரவர் தேவைக்கும் அரசியலுக்கும் ஏற்ப, என் பத்திகளைப் பயன்படுத்துவதை இன்றைய அறமற்ற ஊடகச் சூழ்நிலையில் என்னால் தடுக்க இயலாது. அதனால் அத்தகைய நடவடிக்கைகளுக்கு நான் பொறுப்பேற்க மாட்டேன். எனவே, சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். நிறுத்தாவிட்டாலும், இது இன்றைய தினத்துக்காக எழுதப்பட்டதில்லை என்று தெளிவு படுத்துகிறேன்.

அவரவர் அரசியல் சண்டைகளை அவரவர் பக்கத்தில் வைத்துக் கொள்ளவும். தமிழ்த்தேசிய-திராவிட அரசியல் சண்டைகளுக்கு நான் ஆளில்லை. இரண்டைப் பொறுத்தும் என் பார்வை என்ன என்பதைப் பலமுறை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். மீண்டும் மீண்டும் கிளிப்பிள்ளை போல் பேசியதையே பேசிக் கொண்டிருக்க நான் வேலையில்லாத வெற்று இல்லை என கவிஞர் தாமரை தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.