ஓடிடியில் செப். 10ல் கசடதபற … நேற்று டிரைலர் வெளியாகி எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியுள்ளது…

0
Follow on Google News

தமிழில் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட கசடதபற படம் கசடதபற படத்தை இயக்குனர் சிம்புதேவன் இயக்கியுள்ளார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சாந்தனு, ஹரீஷ் கல்யாண், சந்தீப் கிஷன், ரெஜினா,பிரியா பவானி ஷங்கர், விஜயலட்சுமி பேன்ற பலர் நடித்துள்ளனர்.

இந்த கசடதபற பட வெளியாகும் தேதி குறித்து படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். இந்த படத்திற்கான டிரைலரும் நேற்று வெளியானது. ஏற்கனவே இந்த படத்திற்கான டீசரை படக்குழுவினர் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து டுவிட்டரில் வெளியிட்டனர். இப்போ டிரைலரை நடிகர் சிவ கார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு நடிகரின் கதாபாத்திரங்களும் ட்ரெய்லரில் கச்சிதமாக வெளிவந்தது. டிரைலரை பார்க்கும்போது இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பது எதிர்பார்ப்பை உண்டாகிறது. ஆறு பேர் வாழ்க்கையின் கதைகள் ஒரு கதைக்குள் அடங்குகிறது. இந்த படத்திற்கு 6 இசையமைப்பாளர்களின் இசைகளில் படம் வேற லெவலில் களமிறங்குகிறது.

கொரோனா பெரும் தொற்று காரணத்தினால் இந்த படம் “சோனி லீவ்” ஓடிடி தளத்தில் செப்டம்பர் மாதம் 10ம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே சோனி லீவ் தளத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திட்டம் இரண்டு படம் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படமும் வெற்றி படமாக அமையுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.