ஒவ்வொரு தலையிலும் ரூ.2.63 லட்சம் கடன் சுமை..ஆனால் 39 கோடியில் கருணாநிதி நினைவிடம்…!முக ஸ்டாலின் அடுத்த சிக்சர்..

0
Follow on Google News

கடன் வாங்கி கட்டாயச் செலவு செய்யும் வகையில் தமிழ் நாட்டின் நிதி நிலைமை சரிந்துவிட்டது. வருவாய் பற்றாக்குறை இப்படி இருப்பதால், நிதி பற்றாக்குறை கட்டாயம் அதிகரிக்கும். தமிழகத்தின் நிதி பற்றாக்குறை ரூ.92,305 கோடியாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது தமிழக அரசுக்கு ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் கோடி பொது சந்தா கடன் உள்ளது. தமிழகத்தில் புள்ளிவிவரங்களின்படி, 2 கோடியே 16 லட்சத்து 24,238 குடும்பங்கள் எனக் கொண்டால், ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2.63 லட்சம் கடன் உள்ளது என சமீபத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

இந்நிலையில் மதுரையில் 70 கோடி ரூபாய் மதிப்பில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் அமைக்கப்படும் என திமுக ஆட்சிக்கு வந்த உடனே அதிரடியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார் இதனை தொடர்ந்து மக்கள் அதிகமாக வந்து செல்லும் வகையிலும் சாலை வசதி கொண்ட இடம் தேர்வு செய்யப்பட்டு , முழுவதும் குளிரூட்டப்பட்ட 7 தளங்களைக் கொண்டதாக கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்கும் பனி மதுரையில் நடந்து வருகிறது.

இதனை தொடர்ந்து தற்போது, சட்டசபை கூட்ட தொடரில் சட்டசபை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகித்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னையில் நினைவிடம் கட்டப்படும். மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் ரூ.39 கோடி செலவில், 2.23 ஏக்கரில் நினைவிடம் அமைக்கப்படும். கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களுடன் நினைவிடம் கட்டப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2.63 லட்சம் கடன் உள்ளது என தெரிவித்த திமுக, மேலும் தமிழ் நாட்டின் நிதி நிலைமை சரிந்து கிடைக்கும் நிலையில், 70 கோடியில் மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகம், 39கோடியில் கருணாநிதி நினைவிடம் அமைக்கப்படும் என வெளியிட்டுள்ள அறிக்கைகைகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது, கடன் வாங்கி செலவு செய்யும் நிதி நெருக்கடியான இந்த சூழலில் இது தேவையா என விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.