துல்லியமாக கண்காணிக்க தனி உளவு பிரிவு….. அதிரடி காட்டும் அண்ணாமலை.. பீதியில் மாவட்ட தலைவர்கள்

0
Follow on Google News

தமிழக பாஜக தலைவராக முன்னாள் IPS அதிகாரி அண்ணாமலை பதவி ஏற்ற பின் கட்சிக்குள் சில அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துகொண்டிருப்பது கட்சிக்காக சுயநலம் இல்லாமல் அர்ப்பணிப்போடு வேலை செய்யும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற கூட்டத்திற்கு வராத பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகளை நிரந்தரமாக வீட்டிலே இருக்கட்டும் என முதல்வன் படத்தில் வரும் அர்ஜுன் பாணியில் புதிய நிர்வாகிகளை நியமிக்க உத்தரவிட்டு அதிரடி காட்டினார்.

இந்நிலையில் சென்னையில் நடத்த மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில், மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் மத்தியில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாவட்டத் தலைவர்களின் இதுவரையிலான செயல்பாடுகளை மதிப்பிடவும், இனி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை திட்டமிடவும் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, பிரச்சினைகளை காரணம் காட்டி கட்சிப் பணிகளில் சுணக்கம் காட்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

மாவட்டத் தலைவர்கள் என்ன பிரச்சினை என்றாலும், தயங்காமல் என்னிடம் தெரிவித்து அதற்கு தீர்வு காண வேண்டும். இதுவரை நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனி மாவட்டத் தலைவர்களின் செயல்பாடுகள் துல்லியமாக கண்காணிக்கப்படும். கட்சி வளர்ச்சிப் பணிகளில் ஆர்வம்காட்டாத, சிறப்பாக செயல்படாத மாவட்டத் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரிக்ககை விடுத்தார் பாஜக தலைவர் அண்ணாமலை.

மேலும் மாவட்டத்தில் சரி வர வேலை செய்யாதவர்களை நீக்கிவிட்டு தகுதியான நபர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என அண்ணாமலை ஏற்கனவே உத்தரவிட்டதை தொடர்ந்து பல மாவட்டங்களில் கட்சிக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகிறது, ஆனால் சில மாவட்டங்களில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்தந்த மாவட்ட தலைவர்கள்.

தங்களுக்கு பிடிக்காத நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு, தங்களுக்கு வேண்டியவர்களை நியமித்து வருகின்றனர், அதாவது தங்களுக்கு ஜால்ரா போடும் நபர்களை தேடி தேடி கண்டுபிடித்து பதவி கொடுத்து வருகின்றனர்.ஆனால் மாவட்ட அரசியலில் என்ன நடக்கிறது என்பதை துல்லியமாக கண்காணிக்க மாநில தலைவராக பொறுப்பேற்று கொண்ட போதே ஒரு பிரிவை அமைத்து துல்லியமாக கண்காணித்து வருகிறார் மாநில தலைவர் அண்ணாமலை. விரைவில் இது தொடர்பாக மாவட்ட தலைவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சொந்த விருப்பு, வெறுப்பு காரணமாக செயல்படும் மாவட்ட தலைவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்கிறது அரசியல் வட்டாரம்.