உலக சிங்கங்கள் தினத்தை முன்னிட்டு சிங்கங்களை பாதுகாப்பது குறித்து பிரதமர் மோடி டுவிட்.

0
Follow on Google News

இன்று உலக சிங்கங்கள் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் சிங்கம் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டது. உலகம் முழுவதும் எங்கெல்லாம் காடுகள் ஒருபோதும் அங்கெல்லாம் ராஜாவாக இருப்பது சிங்கம் தான். ஆனால் தற்போது சிங்கங்களை ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா கண்டத்தில் காணமுடிகிறது. ஆசியா கண்டத்தில் உள்ள இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் அதிக அளவில் காணமுடிகிறது.

அதனால் ஆசியா சிங்கத்தின் தாயகமாக இந்தியா திகழ்கிறது. சிங்கங்கள் அழிந்து வரும் விலங்குகள் பட்டியில் உள்ளதாக இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஆனால் சிங்கம்புலி பாதுகாப்பதில் உலகம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இது குறித்து இன்று பிரதமர் மோடி ட்விட்டரில் நான் குஜராத் முதல்வராக இருந்தபோது ஜுனாகத் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கிர் தேசிய பூங்காவில் உள்ள சிங்கங்களை பாதுகாக்கவும் அதன் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக பல நடவடிக்கைகளை கொண்டு வந்ததாகக் கூறினார்.

தற்போது இந்தியாவில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார். மேலும் சிங்கங்கள் கம்பீரமான தைரியமான இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு என்றும் சிங்கங்களை பெருமிதம் கொண்டார். ஆசிய சிங்கங்களுக்கு இந்தியா தாயகமாக இருப்பதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். சிங்கங்களை பராமரித்து பாதுகாத்து வாழ்வதற்கு பல திட்டங்களின் மேற்கொண்டதாகவும் இதான் சுற்றுலாத் துறையும் உயர்ந்தாக கூறினார்.