சென்ற இடமெல்லாம் துரத்தியடிக்கப்படும், யார் இந்த போர்ஜரி மதன்.? இவருடன் இணைத்து பயணிக்கும் வெண்பா பற்றி உங்களுக்கு தெரியுமா.?

0
Follow on Google News

பெரியாரிஸ்ட், தமிழ் தேசியம், இந்துத்துவம், திராவிடம் என பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன் பேசாத, போகாத இடமே கிடையாது, அவர் செல்லும் இடத்திற்கு தகுந்தார் போல் தன்னை மாற்றி கொள்பவர் மதன் ரவிச்சந்திரன். தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான முன்னனி தொலைக்காட்சியில் பணியாற்றிய மதன் எந்த ஒரு தொலைக்காட்சியிலும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் வேலை செய்யவில்லை, பணிபுரியும் இடத்தில் ஏதவாது ஒரு பிரச்சனையின் காரணமாக அங்கே இருந்து துரதியடிக்கபட்டவர் மதன்.

இப்படி ஒவ்வொரு தொலைக்காட்சியாக துரதியைக்கப்பட்ட போது, இவருக்கு அடைக்கலம் கொடுத்தது வின் டிவி. மதன் வின் டிவியில் பணிக்கு சேர்ந்த பின் இதற்கு முன் தான் திராவிட தலைவர் மற்றும் திராவிட சித்தாந்தம் குறித்து கேள்வி எழுப்பியதால் துரத்தியடிக்கப்பட்டதாக ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தி, திராவிட சித்தாந்தத்துக்கு எதிராக இருப்பவர்கள் ஆதரவை பெற்றார், அதே போன்று தன்னை விடுதலை புலி இயக்க தலைவர் பிரபாகரன் ஆதரவாளராக காட்டி கொண்டு தமிழ் தேசியம் பேசுவோர் ஆதரவையும் பெற முயன்றார்.

இந்நிலையில் அடைக்கலம் கொடுத்தது வின் டிவி என்பதை மறந்து ஒரு கட்டத்தில் தனக்கு சமூக வலைதளத்தில் ஆதரவு பெருகுவதை தொடர்ந்து, தான் இல்லை என்றால் இனி வின் தொலைக்காட்சியே கிடையாது என்கிற தோரனையில் வின் டிவி நிர்வாகத்திடம் அவமரியாதையாக நடந்து கொண்டதை தொடர்ந்து அங்கிருந்து துரதியடிக்கப்பட்டார். மதன் கேட்கும் கேள்விகள் மற்றும் அவருக்கு தேவையான குறிப்புகள் அணைத்து அவருக்கு பின்னணியில் இருந்து எழுதி தருவது அவரது பெண் தோழி வெண்பா.

இதனை தொடர்ந்து வின் டிவியில் இருந்து துரதியடிக்கப்பட்ட மதன் சில நாட்கள் வீட்டில் முடங்கியவர், சமூக வலைத்தள பிரபலம் கிஷோர் கே சாமி உதவியில் சேனல் விஷன் நிறுவனத்தில் நெறியாளராக பணியில் சேர்த்தார், அவருடன் அவருடைய தோழி வெண்பாவும் அதே நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார், ஒரு சமயம் கிஷோர் கே சாமி மற்றும் சக நண்பர்களுடன் மது அருந்திய மதன் ரவிச்சந்திரன் மது போதையில் எனக்கு வாழ்க்கை கொடுத்த தெய்வமே என கிஷோர் கே சாமி காலில் விழுந்து சேனல் விஷனில் வேலை ஏற்பாடு செய்ததற்காக நன்றி தெரிவித்துள்ளார் மதன்.

ஆனால் அடுத்த சில நாட்களில் உதவி செய்த கிஷோர் கே சாமிக்கு எதிராக மதன் வேலை செய்ததாக கூறப்படுகிறது, இது கிஷோர் கே சாமி கவனத்துக்கு சென்றதும் இருவருக்கு இடையில் மோதல் உருவாகி உள்ளது. இதன் பின் மதன் மற்றும் வெண்பா இருவருடைய தவறான நடவடிக்கைகளால், சேனல் விஷன் நிர்வாகம் இருவரையும் அழைத்து கடுமையாக கண்டித்துள்ளது, இதன் பின் அங்கே இருந்தும் இவர்கள் இருவரும் துரத்தப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பெரும்பலான அணைத்து தொலைக்காட்சிகளிலும் பணியாற்றி துரதியடிக்கப்பட்டதால், மேலும் திமுகவினரிடம் இருந்த தங்களை பாதுகாத்து கொள்ள பாஜகவில் இணைந்தார் மதன் ரவிச்சந்திரன், இதன் பின் மதன் டைரி என்கிற பெயரில் யூ ட்யூப் சேனல் ஒன்றை நடத்திய மதனுடன் வழக்கம் போல் இணைத்தே பணியாற்றி வந்தார் அவருடைய பெண் தோழி வெண்பா. பிரபல யூ ட்யூபர் மரித்தாஸ் போன்று பிரபலம் அடைந்து விடலாம் என நினைத்த மதன் மற்றும் வெண்பா இவருடைய கனவு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

இதனை தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்த சில நாட்களில் காணமல் போன மதன் ரவிச்சந்திரன், தற்போது திமுகவுக்கு பயந்து தஞ்சம் அடைந்த பாஜகவுக்கு எதிராக செயல்பட்டதால் மதன் மற்றும் அவருடைய பெண் தோழி வெண்பா இருவரும் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள், இதனை தொடர்ந்து மதன் மீது தமிழக அரசியலில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது, அவர் சில அரசியல் தலைவர்களை பிளாக் மெயில் செய்து பணம் பறிக்க கூடியவர் என்றும், போர்ஜரி வேலைகள் அதிகம் செய்யக்கூடியவர் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில் போர்ஜரி மதன் என்று சிலர் சமூக வலைதளத்தில் அவரை அடை மொழியுடன் விமர்சனம் செய்து வருவது குறிப்பிடதக்கது.