லாரன்ஸ் இயக்கத்தில் மிரளவைக்க வருகிறது ‘துர்கா’…

0
Follow on Google News

துர்கா படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் நடிகர் ராகவா லாரன்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியானது. டான்சராக வந்து தற்போது நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்ற உயர்ந்த இடத்தைப் பிடிக்க கடினமான உழைப்புக்களை கடந்து வந்தவர் நடிகர் ராகவா லாரன்ஸ். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என்று பல படங்களை இயக்கியும் நடித்துள்ளார். இவர் ஒரு சமூக ஆர்வலர் கூட பல குழந்தைகளுக்கு இலவசமாக இருதய அறுவை சிகிச்சை செய்ய உதவியுள்ளார்.

இவரது டிரஸ்ட் மூலம் பல மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்க்கையை கொடுத்துள்ளார். திகில் படங்களுக்கு பெயர் போனவர். திகில் படங்களை இயக்குவதில் ஹாலிவுட்டை மிஞ்சி விட்டார். இவர் இயக்கத்தில் தொடர்ந்து முனி, காஞ்சனா 1, காஞ்சனா 2, காஞ்சனா 3 என திகில் திரைப்படங்களை கொடுத்து வசூலில் பாக்ஸ் ஆபீஸை முறியடித்து விட்டார். இவர் இயக்கும் திகில் திரைப்படங்களில் இவருக்கு அம்மா கதாபாத்திரத்தில் அனைத்து படங்களிலும் பிரபல நடிகை கரகாட்டம் கோவை சரலா நடித்துள்ளார்.

தற்போது காஞ்சனா 4வது பாகம், துர்கா திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிரட்டலாக ட்விட்டரில் ராகவாலாரன்ஸ் வெளியிட்டார். இந்த படத்தில் இவரே இயக்கி, நடித்து, தயாரிக்கும் படம். இந்த பர்ஸ்ட் லுக்கில் ராகவா லாரன்ஸ் சாமியார் வேடத்தில் மிரள வைக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இஇதில் கோவை சரளா நடிக்கிறாரா என்பது குறித்து கேள்விக்குறியாகவே உள்ளது.மேலும் இந்த படத்தில் நடிக்க இருக்கும் கதாபாத்திரங்கள் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.