போக்குவரத்து துறையில் ரூ.200 கோடிக்கு மேல் ஊழல் ..திடுக்கிடும் தகவலை வெளியிட்ட H.ராஜா… ஆட்சிக்கு வந்து மூன்று மாதத்திலேவா?

0
Follow on Google News

தமிழகத்திற்கு, இந்த ஆண்டிற்கான, நபார்டு வங்கியின் கடன் உதவி, 40,000கோடி ரூபாயாக இருக்கும் என நபார்டு வங்கியின் தலைவர் சிந்தலா ஏற்கனவே தெரிவித்திருந்தார் கடந்த மாதம் தலைமை செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய நபார்டு வங்கியின் தலைவர் சிந்தலா, தமிழகத்திற்கு நபார்டு வங்கியின் உதவி, ரூ. 40,000கோடி ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடனுதவியானது, கடந்த ஆண்டு, ரூ. 27,040 கோடி ஆக இருந்தது.

இந்நிலையில் சென்னையில் எண்ணூர், முட்டுக்காடு, கோவளம் உள்ளிட்ட 4 இடங்களில் சுமார் ரூ.2 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் 4 புதிய பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்திருந்தார், மேலும் மதுரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் சுமார் ரூ.70 கோடி செலவில் நூலகம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது அதில். தமிழகத்தில் போக்குவரத்து துறையை மேம்படுத்தவும், கூடுதலாக ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க ரூபாய் 623.59 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார், இந்நிலையில் கடும் நிதி நெருக்கடியில் தமிழகம் இருந்து வரும் இந்த நிலையில் திமுகவின் சில அறிவிப்பு விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் H.ராஜா. ஆட்சி பொறுப்பேற்ற 3 மாதத்தில் 40 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிய ஆட்சி திமுக ஆட்சி, ரேஷன் கார்டில் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் என அறிவித்துவிட்டு தற்போது தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் வழங்க முன்னேற்பாடு செய்யப்படும் என்பது பிரச்சாரத்தின் போது ஒன்றும் தற்போது ஒன்றும் பேசுவதாக உள்ளது என ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில்.

தற்போது திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் H.ராஜா, அதில் 90 நாட்களில் ரூ.40,000 கோடி கடன். ஆனால் ரூ.2,500 கோடியில் 4 பூங்காக்கள். ரூ.400 கோடி முதல் ரூ.450 கோடியில் வாங்கக் கூடிய 1000 பேருந்துகள் ரூ. 650 கோடியில் வாங்க முடிவு. திமுகவும் ஊழலும் பிரிக்க முடியாதது என H.ராஜா தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பேருந்து வாங்குவதில் மட்டும் 200 கோடி வரை முறைகேடு உள்ளதா என மக்கள் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடதக்கது.