விக்ரம் படத்தில் இணைந்த பிக் பாஸ் ஷிவானி நாராயணன்… வைரலாகும் புகைப்படம்…

0
Follow on Google News

லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படத்தில் சத்தமில்லாமல் இணைந்த ஷிவானி நாராயணன். இதை உறுதிப்படுத்தும் விதமாக விஜய் சேதுபதியுடன், பிக் பாஸ் ஷிவானி எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் விக்ரம். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கிறார்.

இந்த படத்தில் பிரபல நடிகர்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்கிறார்கள். இந்த படத்தில் மலையாள நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் நடிக்கிறார். இவர் இந்த படத்தில் கமலுக்கு மகனாக நடிக்கிறார். மேலும் இந்த படத்திற்கான CASTING குறித்து ‌இதுவரை படக்குழுவினர் அறிவிக்கவில்லை.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்தும் அவர் கதாபாத்திரங்கள் குறித்தும் செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே தளபதி விஜயை வைத்து இயக்கி வெளிவந்த மாஸ்டர் மிக பெரிய அளவில் வெற்றியை தேடி தந்தது. இதான் பிறகு இவர் விக்ரம் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் அனிருத் இசையில் உருவாக இருக்கிறது.

இந்த படம் குறித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் சத்தமில்லாமல் இணைந்த ஷிவானி நாராயணன். உறுதி செய்யும் விதமாக விஜய் சேதுபதியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இவர் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டவர். பட வாய்ப்புக்காக கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்றவர். தற்போது முதல் படத்திலேயே மூன்று முக்கிய நடிக்க இருக்கிறாராம். படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வருகிறது.