வீட்டை மாற்ற முடியல இவர் சார்ந்திருக்கும் தொழிலை நடத்த முடியல இதில் நாட்டை மாற்ற போகிறாராம் எதை யாரடா மாற்றப் போகிறார் என நடிகர் ரஜினிகாந்தை ஒருமையில் மிக கடுமையாக அமைச்சர் சி.வி.சண்முகம் அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, அவர் பேசியதாவது, தமிழக அரசியலில் தற்போது கருணாநிதி இல்லை, ஜெயலலிதா இல்லை ஆகையால் பத்திரிக்கைக்கு மக்களுக்கு தெரிந்த ஒரு முகம் தேவை அதனால் ரஜினியை பத்திரிகைகள் தூக்கிப் பிடிக்கின்றன, ஆனால் ஜூன் மாதத்திற்கு பின்பு தேர்தல் முடிந்ததும், இதே பத்திரிக்கைகள் ரஜினியை அடி அடி என துவைத்து வைக்கப் போகிறார்கள், அதை நாம் பார்க்கத்தான் போகிறோம், நாம் செய்ய வேண்டிய வேலைகளை பத்திரிக்கை துறையினர் ரஜினியை செய்வார்கள் என தெரிவித்த சிவி.சண்முகம்.
மேலும் தொடர்ந்து ஆக்ரோஷமாக பேசிய அமைச்சர் சிவி.சண்முகம், தமிழ்நாட்டில் எத்தனை பிரச்சனை இருக்கு என்பது இவர்களுக்குத் தெரியுமா.? தமிழ்நாட்டில் வாழ்வாதார பிரச்சனை இருக்கிறது இதற்கு என்றைக்காவது இவர்கள் ஆலோசனை வழங்கி இருக்கிறார்களா.? கருத்து சொல்லி இருக்கிறார்களா.?போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்களா.? லட்சக்கணக்கான தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட போது இந்த நடிகர்-நடிகைகள் எங்கே போனார்கள்.அதைக்கூட விடுங்கள் இன்று எட்டு மாத காலமாக கொரனா தொற்று காரணமாக உலகமே பாதிக்கப்பட்டு பணக்காரர் முதல் ஏழை வரை அனைவரும் குடும்பம் நடத்துவதற்கு சிரமப் பட்டு இருந்தனர், இந்த சூழலில் ஒரு ஏழை கூட தன்னால் முடிந்த உதவியை மக்களுக்கு செய்து கொண்டிருந்தார், ஆனால இன்றைக்கு அரசியலுக்கு வந்து கொண்டு இந்த நாட்டை காப்பாற்றுவேன் என்று சொல்கின்ற இந்த நடிகர் நடிகைகள், இந்த எட்டு மாத காலத்தில் ஒரு நயா பைசா அல்லது ஒரு ஐந்து கிலோ அரிசி கொடுத்தேன் என்று சொல்வதற்கு இந்த நடிகர் நடிகைகளுக்கு அருகதை இருக்கிறதா,
நான்தான் சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக்கொள்ளும் நடிகர்கள் ஏதாவது ஒரு உதவி செய்தார்களா, ஆனால் சினிமாவில் நல்லவர்கள் போல் வேடமிட்டு நடிக்கும் இந்த நடிகர்கள் மத்தியில் சினிமாவில் வில்லனாக, கற்பழிப்பு காட்சியில் நடிக்கக்கூடிய, கொள்ளைக்காரனாக நடிக்கக்கூடிய, ஒரு ஹிந்தி நடிகர் உலகம் முழுவதும் பாராட்டும் வகையில் உதவி செய்துள்ளார்,அந்த வில்லன் நடிகர் தான் உண்மையான வீரன். ஆனால் தமிழ்நாட்டில் எத்தனை நடிகர்கள் இருக்கிறார்கள், எவ்வளவு கோடி வைத்திருக்கிறார்கள் ஏதாவது உதவி செய்திருக்கிறார்களா.?
எங்களை கேனையன் என்று நினைத்துக்கொண்டு உள்ளார்களா, இவர் எதை வேணாலும் சொல்வார் நாம் எதை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டு போய் விடுவோமா. இன்று நமக்குத் திமுக மட்டும் எதிரியல்ல இந்த ஊடகங்கள் இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி நம் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். மேலும் முன்னாள் துணைவேந்தர், முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் இப்படி ஆலோசனை நடத்திக் கொண்டே இரு சீக்கிரம் விளங்கிடுவாய் என நடிகர் ரஜினிகாந்தை மிகக் கடுமையாக பேசியவர், ஆனால் அவருக்கு கீழே இருக்கிற விவசாயிகள் பிரச்சனை தெரியாது, இட ஒதுக்கீடு என்றால் என்ன என்று தெரியாது.
எதற்கெடுத்தாலும், நாங்கள் எம்ஜிஆர் என்று சொல்கிறான் டேய் 5,000 பேர் கூடிடா நீ எம்ஜிஆர் ஆகி விடுவாயா, நீ செத்தா சுடுகாட்டுக்கு போறதுக்குள்ள உனது ரசிகர்கள் இன்னொருத்தனுக்கு ரசிகர்மன்ற ஆரம்பித்து விடுவார்கள், ஆனால் எம்ஜிஆர் அப்படி அல்ல, ஏண்டா உனக்கு பெயர் இல்லை ஜாதகம் இல்லை, உனது கொள்கையை சொல்லுடா எதற்காக எம்ஜிஆர் பெயரை பயன்படுத்துகிறாய். மாற்றுவோம் மாற்றுவோம் என்ன மாற்ற, உன் சொந்த வீட்டை மாத்த முடியல. நீ என் நீ செய்கின்ற தொழிலில் இருக்கின்ற பிரச்சனையை தீர்க்க வக்கில்ல, நாதி இல்லை, நீ இந்த ஊர் வந்து மாற்ற போகிறாயா.
நீ சார்ந்திருக்கும் திரைப்படத்துறையில் உன்னால் பிரச்சனையை தீர்க்க முடிந்ததா நடிகர் சங்க கட்டடம் இத்தனை ஆண்டு காலமாக கட்டி முடிக்காமல் இருக்கிறதே அந்த பிரச்சனையை தீர்த்த உனக்கு வக்கில்லை, இதில் நாட்டை மாற்ற போகிறாராம், வீட்டை மாற்ற முடியல இவர் சார்ந்திருக்கும் தொழிலை நடத்த முடியல இதில் நாட்டை மாற்ற போகிறாராம் எதை யாரடா மாற்றப் போகிறார் என நடிகர் ரஜினிகாந்தை ஒருமையில் மிக கடுமையாக பேசினார் அமைச்சர் சி.வி.சண்முகம்.