நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தது நடிகர் ராஜ்கிரன் என்றாலும் வடிவேலு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் அமைத்து கொடுத்தது நடிகர் விஜயகாந்த், சின்ன கவுண்டர் படத்தில் நகைசுவை காட்சியில் கவுண்டமணி மற்றும் செந்தில் இருவரும் நடித்திருந்தாலும், நடிகர் வடிவேலுவுக்கு முக்கிய காட்சிகளில் நடிக்க வாய்ப்புகளை பெற்று தந்தவர் விஜயகாந்த், சின்னக்கவுண்டர் படத்தில் வரும் ஒரு பாடல் காட்சிகளிலும் நடிக்க வாய்ப்பு கொடுத்திருப்பார் விஜயகாந்த்.
இந்த படத்தை பார்த்த பின்பு தான் கமல்ஹாசன் தேவர் மகன் படத்தில் நடிக்க வடிவேலுவுக்கு வாய்ப்பு வழங்கினார், மேலும் விஜயகாந்த் அடுத்தடுத்து கோவில் காளை போன்ற பல படங்களில் நடிகர் வடிவேலுக்கு வாய்ப்புகள் பெற்று தந்தார், வடிவேலு மதுரையை சேர்ந்தவர், நடிகர் விஜயகாந்தும் அதே ஊரை சேர்ந்தவர் என்பதால் சினிமாவில் வடிவேலு வளர்ச்சிக்கு பெரும் உதவிகள் செய்தார் விஜயகாந்த், மேலும் வடிவேலு மட்டுமின்றி சினிமாவில் செல்வமணி உட்பட பல இயக்குனர்கள் வளச்சிக்கு உதவியாக இருந்தவர் விஜயகாந்த்.
இந்நிலையில் கடந்த 2011 சட்டசபை தேர்தலின் போது திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த வடிவேலு, அதிமுக கூட்டணியில் இருந்த விஜயகாந்துக்கு எதிராக மிக கடுமையாக பேசினார், ஆனால் வடிவேலுவின் கடும் விமர்சனத்தை விஜயகாந்த் கண்டுகொள்ளவில்லை, இருந்தும் தொடர்ந்து அரசியல் மேடை மட்டுமின்றி சினிமா நிகழ்ச்சி மற்றும் இதர நிகழ்ச்சியிலும் நடிகர் விஜயகாந்தை மிக கடுமையாக விமர்சனம் செய்து வந்தார் வடிவேலு.
இதனை தொடர்ந்து 2011 சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்து அதிமுக ஆட்சியை கைப்பற்றியது, இதன் பின் வடிவேலுவின் சினிமா வாழ்கை முடிவுக்கு வந்தது, சினிமாவில் பெரும் உச்சத்தில் இருந்த வடிவேலு, மிக கடுமையாக விஜயகாந்தை விமர்சனம் செய்து அவ பெயரை பெற்றது மட்டுமில்லை சினிமாவில் தனது மார்க்கெட்டையும் இழந்தார், அதன் பின் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்த வடிவேலுவை மக்கள் ஏற்று கொள்ளவில்லை.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் நடிகர் விஜயகாந்த் வீட்டுக்கு சென்ற வடிவேலு அங்கே மனம் விட்டு கதறி அழுதுள்ளார், என்னை மன்னித்து விடுங்கள், எனக்கு எவ்வளவோ உதவி செய்துள்ளீர்கள் ஆனால் அந்த நன்றியை ம்,மறந்து உங்களை மிக கடுமையாக விமர்சனம் செய்துவிட்டேன் என விஜயகாந்திடம் கதறி அழுதுள்ளார் வடிவேலு, அருகில் இருந்த விஜயகாந்த் மனைவி பிரேமலதா விடுங்க கேப்டன் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என சமாதனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.