சித்த மருத்துவம் இந்து மருத்துவமே கிடையாதா.? அப்படியானால் திருமூலர் யார்.?பேராசிரியரின் காரசார விவாதம்..!

0
Follow on Google News

அறுவை சிகிச்சையில் ஆயுர்வேத மருத்துவர்கள், அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு என்ற தலைப்பில் நடந்த தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற மருத்துவர் ரவீந்திரநாத், எப்போதெல்லாம் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் பிற்போக்கு சிந்தனைகளை திணிப்பதாகவும், இந்துத்துவா கருத்துக்களையும், சமஸ்கிருதத்தை திணிப்பதாக ரவிந்திரநாத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் பேசுகையில், இல்லாத கறுப்பு பூனையை இருட்டு அறையில் மருத்துவர் ரவீந்திரநாத் தேடுவதாக கூறினார், மேலும் அதிகமாக சமஸ்கிருதத்தை முன்மொழிந்த அரசாங்கம் கேரள அரசாங்கம், ஆயுர்வேத மருத்துவத்தை பிரமோட் செய்யும் அரசாங்கம் கேரளா அரசாங்கம், வெளிநாடுகளில் இருந்து ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றால் கம்யூனிஸ்ட் ஆளும் கேரளாவிற்கு தான் பெரும்பாலும் செல்கிறார்கள், பாஜக ஆளும் எந்த மாநிலத்துக்கும் செல்வதில்லை.

ஆகையால் கேரளாவில் உள்ள அரசாங்கம் ஆயுர்வேத மருத்துவம் என்பது சமஸ்கிருதம் என ஆயுர்வேத சிகிச்சையை ஒழித்துக் கட்ட முடியுமா.? ஆயுர்வேத மருத்துவம் இந்தியாவின் பொக்கிஷம் என குறிப்பிட்டார் பேராசிரியர். ஆயுர்வேத மருத்துவம் இந்தியாவின் பொக்கிஷம் எதை அணைத்து அரசாங்கமும் காக்க வேண்டும் என சுட்டிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து சித்த மருத்துவர் வேலாயுதம் குறுக்கிட்டு சித்த மருத்துவம் இந்து மருத்துவம் கிடையாது என பேசியதற்கு பதிலளித்த பேராசிரியர்

நீங்க பழனி கோவிலுக்கு போனால், அங்கே அந்த கோவிலில் முருகப் பெருமானுடைய நவபாஷாண சிலையை ஸ்தாபித்தவரே சித்தர்தான், அவருக்கு சமாதி வைத்து இன்னும் மக்கள் வழிபட்டு கொண்டிருக்கிறார்கள் சைவத்திருமுறைகள் பன்னிரண்டு திருமுறைகளில் திருமந்திரம் எழுதிய திருமூலர் ஒரு பெரிய சித்தர், அவரே சைவத் திருமுறைகள் எழுதியிருக்கிறார் அதனால் ஏதோ போகிற போக்கில் ஊடக விவாதக்களில் பேசிவிட்டு போக கூடாது என பேராசிரியர் பதிலளித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.