சின்னத்திரை நடிகை சித்ரா மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பாக பெரும் சர்ச்சை வெடித்துள்ள நிலையில், போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது, சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தற்கொலை மரணம் என உறுதி செய்யப்பட்டாலும் அவருடைய தற்கொலை மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கினர்.
சித்ரா பெற்றோர் மற்றும் அவருடைய கணவர் ஹேம்நாத் ஆகியோருடன் போலீசார் நடத்திய விசாரணையில் ஹேம்நாத் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்ததை தொடர்ந்து போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது, மேலும் சித்ரா தொலைபேசியில் இருந்து சில முக்கிய ஆவணங்களை ஹேம்நாத் நீக்கியதை விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்த ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார், மேலும் தொடர்ந்து ஹேம்நாதிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் நடிகை சித்ராவிடம் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார் ஹேம்நாத், மேலும் இவர் ஏற்கனவே பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளது தெரியவந்துள்ளது, அவரால் ஏமாற்றபட்ட பெண்களின் பட்டியல் நீண்டு கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது, மேலும் தன்னை தொழில் அதிபர் என சித்ராவிடம் அறிமுகம் செய்துகொண்ட ஹேம்நாத் பின் நாளடைவில் உண்மை வெளியில் தெரிய வந்துள்ளது, இருந்தும் ஹேம்நாத் நல்லவர் கிடையாது என பலர் சித்ராவிடம் பலர் வலியுறுத்தியும் அவர் ஹேம்நாத்தை விட்டு பிரியவில்லை.
ஏற்கனவே வங்கியில் வீட்டு கடன், விலை உயர்ந்த கார் கடன் என பெற்றுள்ள சித்ரா ஒரு கட்டத்தில் ஹேம்நாத்துக்கு பணம் கொடுப்பதை நிறுத்தியுள்ளார், இதனால் கோவம் அடைந்த ஹேம்நாத் மது அருந்திவிட்டு சித்ராவை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது, ஒரு கட்டத்தில் ஹேம்நாத்தின் சித்ரவதையை தாங்கி கொள்ள முடியாத சித்ரா, தான் அனுபவித்து வந்த சித்ரவதையை நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்துள்ளார், அவருடைய மாமனாரிடம் கண்ணீர் விட்டு கதறி தொலைபேசியில் அழுதுள்ளார் சித்ரா.
இந்நிலையில் சித்ரா தற்கொலை செய்துகொண்ட அன்று மதுபோதையில் இருந்த ஹேம்நாத் ஹோட்டல் அறையில் சித்ராவிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார், கடும் மனஉளைச்சலுக்கு ஆளான சித்ரா, அறைக்கு வெளியில் ஹேம்நாத்தை அனுப்பிவிட்டு அறையின் கதவை பூட்டி கொண்டுள்ளார், அறைக்கு வெளியில் இருந்த ஹேம்நாத் கதவை பூட்டிக்கொண்டு நாடகம் ஆடுகிறாயா என சத்தமிட்டுள்ளார், நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் ஹோட்டல் ஊழியர்களை அழைத்து ஹேம்நாத் கதவை திறந்து பார்த்த போது சித்ரா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
சித்ரா தற்கொலை செய்து கொண்டதும் அவருடைய தொலைபேசியில் இருந்த முக்கிய தடயங்களை அழித்துள்ளார் ஹேம்நாத், குறுச்செய்தி மற்றும் அவர் தொலைபேசியில் பேசிய ஆடியோ ரெகார்ட் என முக்கிய தடையங்களை அழித்துள்ளார் ஹேம்நாத், மேலும் மாமனார் உடன் சித்ரா கண்ணீர் விட்டு பேசிய ஆடியோவையும் நீக்கியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது, ஆனால் தொழில் நுட்ப உதவியுடன் போலீசார் சித்ரா பேசிய தொலைபேசி உரையாடலை கைப்பற்றியுள்ளதால் சித்ரா தற்கொலை மரணம் பின்னனியில் ஹேம்நாத் இருந்துள்ளதை போலீசார் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.