பெண் இனத்தை கேவலமாக சித்தரிக்கும் ஆபாச பதிவாளருக்கு திமுக எம்பி செந்திகுமார் ஆதரவு.! நீயெல்லாம் ஒரு எம்பியா.? மக்கள் கொந்தளிப்பு.

0
Follow on Google News

திமுகவை சேர்ந்த ஜெயசந்திரன், இவர் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர், திமுக ஐடி பிரிவில் பணியாற்றி வரும் இவர் தொடர்ந்து அரசியல் பெண் தலைவர்கள் பற்றி ஆபாசமாக கருத்து தெரிவித்து வருகின்றவர், இதற்கு முன் பல்வேறு சர்ச்சையில் சிக்கியுள்ளார், தான் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானால் கைதுக்கு பயந்து அந்த கருத்தை உடனே தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கிவிடுவார். ஆனால் தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்து விதத்தில் ஆபாசமாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த பின் இந்த பட்ஜெட் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கருத்து தெரிவித்ததை ஒரு ஆபாச புகைப்படத்துடன் ஒப்பிட்டு மிக கீழ்த்தரமாக திமுகவை சேர்ந்த ஆபாச பதிவாளர் ஜெயச்சந்திரன் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார், மேலும் பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராமுக்கு எய்ட்ஸ் வருமா.? வராத.? என ஒரு சிவப்பு நிற டீசர்ட் ல் அச்சிடப்பட்டது போன்று சித்தரித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.

ஆனால் காயத்ரி ரகுராம் விவகாரம் பெரும் சர்ச்சையானதை தொடர்ந்து பதிவை நீக்கினார் ஆபாச பதிவாளர் ஜெயச்சந்திரன், இப்படி தொடர்ந்து பெண்களை பொது வெளியில் இழிவு செய்து வந்த திமுகவை சேர்ந்த ஜெயச்சந்திரன் மீது அந்த கட்சியின் தலைமை எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை, மாறாக அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் ஜெயச்சந்திரன் சமூக வலைதள பதிவுக்கு லைக் செய்து உற்சாகப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் நாளுக்கு நாள் பெண் அரசியல் தலைவர்கள் பற்றி ஆபாசமாக கருத்து தெரிவித்து வரும் ஜெயசந்திரன் அட்டூழியம் அதிகரித்து கொண்டே சென்றதை தொடர்ந்து, உச்சகட்டமாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து ஆபாசமாக கருத்து தெரிவித்து கைது செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஜெயலலிதா நினைவு தினம் அன்று ஜெயலலிதா குறித்து ஆபாசமாக பதிவு செய்துள்ளார் ஜெயச்சந்திரன்.

இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, கைது செய்யப்படுவோம் என அஞ்சி தனது பதிவை நீக்கியுள்ளார் திமுகவை சேர்ந்த ஆபாச பதிவாளர் ஜெயசந்திரன், இதனை தொடர்ந்து போலீசார் இவரை கைது செய்தனர், இதற்கு திமுக தர்மபுரி எம்பி செந்தில்குமார் உடனே ஜெயச்சந்திரனை விடுதலை செய்யவேண்டும் என கருத்து தெரிவித்தார், மேலும் தற்போது ஜெயச்சந்திரன் விடுதலை செய்யப்பட்டதுக்கு திமுக தர்மபுரி எம்பி செந்திகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளது, பெண்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் எம்பி செந்திகுமாருக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது,மேலும் உங்களுக்கு வாக்களித்ததற்காக வெட்கப்படுகிறோம் என தர்மபுரி பெண்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.