கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனுவை திமுக தமையகமான அறிவாலயத்தில் வழங்கி வந்தனர், விருப்ப மனு அளித்தவர்களை நேரில் அழைத்து திமுக தலைமை நேர்காணல் நடத்தியது, இதில் திமுக பேச்சாளர் பிரசன்னாவும் விருப்ப மனு தாக்கல் செய்தார், ஆனால் அவர் நேர்காணலில் இடப்பெற வில்லை, பிரசன்னா நேர்காணலுக்காக அறிவாலயம் வந்த போது வாசலிலே வைத்து மைக் பிடித்து பேசுவதை மட்டும் செய் உனக்கு அதுக்குள்ள தேர்தலில் போட்டியிட ஆசை வந்துவிட்டதா என துரைமுருகன் திட்டி விரட்டி விட்டதாக அப்போது செய்திகள் வெளியானது.
மேலும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு திமுக வேட்பளர்களிடம் பெரும் தொகையை சம்பாரித்து விடலாம் என எண்ணிய பிரசன்னாவுக்கு அந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை, பிரசன்னா மீது இந்துக்கள் கடும் கோவத்தில் உள்ளதால், அவர் பிரசாரம் செய்தால் திமுகவுக்கு விழும் ஓட்டும் விழாது என பிரசன்னாவை பிரசாரம் செய்யவேண்டாம் என திமுக தலைமை உத்தரவு போட்டதாக கூறப்பட்டது, இதன் பின்னனியில் துரைமுருகன் இருந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் நேரத்தில் எங்கே சென்றார் பிரசன்னா என அனைவரும் தேடி கொண்டிருந்தபோது வேலூர் தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வாக்காளருக்கு பணம் கொடுக்க வைத்திருந்த பணம் முட்டைகளை வருமான வரித்துறை கைப்பற்ற பட்டு, துரைமுருகனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை நடத்திய அதிரடி சோதனைக்கு பின் வேலூர் தொகுதி தேர்தல் நிறுத்தப்பட்டது, இதன் பின்பு துரைமுருகன் கடும் அப்செட்டில் வீட்டில் முடங்கி கிடக்க திமுக பேச்சாளர் பிரசன்னா மெல்ல வெளியில் தலைகாட்ட தொடங்கினர்.
இந்நிலையில் துரைமுருகன் குறித்து வருமான வரித்துறைக்கு திமுகவினர் தான் தகவல் கொடுத்ததாக அப்போது பார்பபரப்பாக பேசப்பட்டது, மேலும் துரைமுருகனால் பெரிதும் பாதிக்கப்பட்ட திமுக பேச்சாளர் பிரசன்னா பெயரும் இதில் அடிபட்டது, இதனை தொடர்ந்து இன்று நடத்த திமுக கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துரைமுருகன் இன்னும் கொஞ்ச நாட்கள் தேர்தல் முடியும் வரை யாரிடமும் பகைமை காட்ட மாட்டேன், யாரிடத்திலும் போட்டு கொடுக்க மாட்டேன் என ஒரு சபதத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
சில கல் நெஞ்சம் படைத்தவர்களின் உள்ளம் வருமான வரித்துறைக்கு நம்மைப் பற்றி செய்தி சொல்லும் அளவிற்கு நன்றி மறந்து போயிருக்கிறது, அறுபது எழுபது ஆண்டுகளாக கட்சிக்காக வாழ்ந்த எனக்கு இது வருத்தமாக இருக்கிறது என தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.துரைமுருகன் பேச்சை கேட்ட திமுகவினர் கட்சில பிரச்சனைன்னா பேசித் தீத்துக்கணும்… அதென்ன ஐ.டி.ல போட்டுக்கொடுக்குறது என கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.