முதுகில் குத்தும் தோழமை.! பாஜகவுக்கு எதிராக திமுகவுடன் இணைந்து ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறதா அதிமுக.?

0
Follow on Google News

பாஜக எக்காரணத்தை கொண்டும் தமிழகத்தில் வளர்ந்து விட கூடாது என்பதில் திமுகவும் அதிமுகவும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறதா.? என்கிற சந்தேகம் அரசியல் விமர்சகர் மத்தியில் எழுந்துள்ளது, சமீப காலமாக தொடர்ந்து தமிழக பாஜகவுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகிறது அதிமுக அரசு, கூட்டணியில் நட்பு பாராட்டினால் களத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு பல்வேறு தடைகளை செய்து வருவது பாஜக நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு மாதங்களாக நடைபெற்ற பாஜகவின் வேல் யாத்திரை நேற்று திருசெந்தூரில் முடிவு பெற்றது, வேல் யாத்திரையின் முடிவு நிகழ்ச்சிக்காக தமிழகம் முழுவதில் இருந்து பாஜகவினர் திருச்செந்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர், ஆனால் எக்காரணத்தை கொண்டு பாஜக நிகழ்ச்சிக்கு கூட்டம் வந்து விட கூடாது என்பதில் உறுதியாக இருந்த தமிழக அரசு, திருச்செந்துர் வரும் பாஜகவினரின் வாகனங்களை போலீசார் துணையுடன் தடுத்து நிறுத்தினர்.

இதனால் கடும் அவதிக்கு ஆளானார்கள் பாஜகவினர். இந்நிலையில் இது குறித்து அரசியல் விமர்சகர் ஸ்டான்லி ராஜன் கூறுகையில், திருசெந்தூரில் நடைபெறும் வேல் யாத்திரையின் நிறைவு நாளில் அங்கு தொண்டர்கள் கூடாதபடி மிக மிக கடுமையான காவல் ஏற்பாடுகள், வாகன சோதனை என மாநில அரசு வரிந்து கட்டி நிற்கின்றது நிச்சயம் இதே அழிச்சாட்டிய‌த்தை மாநில அரசு தமிழகம் முழுக்க நிச்சயம் செய்திருக்கலாம், ஆனால் திமுக கூட்டம் கூடவும்,சில அரசியல் கட்சிகள் நடத்திய போராட்டத்தில் ரயில் மேல் கல் எறியவும் அனுமதித்தது.

பாஜக வளர்ச்சியை தடுக்க திமுக பகிரங்கமாக செயல்பட்டு வந்தாலும், அதிமுக அதை ரகசியமாக செய்கின்றது என்பதன்றி வேறோன்றும் விஷயம் அல்ல‌ காலம் எல்லாவற்றுக்கும் ஒரு கணக்கும் முடிவும் வைத்திருக்கின்றது நிச்சயம் வேல் யாத்திரை மிகபெரும் வெற்றி, அரசின் அடக்குமுறையும் ஊடகங்களின் கள்ள மவுனத்தையும் தாண்டி மிகபெரிய வெற்றியினை அது பெற்றிருகின்றதுதேர்தல் நெருங்க நெருங்க இதே உற்சாகத்துடன் அக்கட்சி பயணித்தால் ஆச்சரியங்கள் அரங்கேற போவது உறுதி என தெரிவித்துள்ளார்.