பாரதியார் ஆங்கிலேயருக்கு மன்னிப்பு கடிதம் எழுதினாராம்.! தோசை புகழ் மாறன் ஆணவப் பேச்சு..!வீடியோ உள்ளே..

0
Follow on Google News

பாரதியார் வெள்ளையனுக்கு எதிராக எதுவுமே எழுதவில்லை என்றும், அவர் வெளிக்காரனுக்கு மன்னிப்பு கடிதம் எழுதியாக திராவிட கழகத்தை சேர்ந்த தோசை புகழ் மதிமாறன் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, மேலும் அவர் பேசியதாவது, பாரதியார் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்படுவோம் என்று அறிந்ததும் பாண்டிச்சேரியில் பதுங்கி விடுகிறார் என்றும் கைது செய்யப்படுவதற்கு முன்பு 10 ஆண்டுகள் பாண்டிச்சேரியில் பாரதியார் இருந்ததாக கூறும் தோசை புகழ் மதிமாறன்.

அப்போது பிரண்ட்ஸ் அரசாங்கம் உட்பட்டு இருக்கும் போது கூட கைது உத்தரவு இருப்பதால் வெள்ளை அரசுக்கு எதிராக பாரதியார் எதுவுமே எழுதவில்லை, ஆனால் அவர் பாண்டிச்சேரியில் இருக்கும்போது என்ன செய்தார் என்றால், அப்போதுதான் அவர் ஆன்மீகத்தை தேடுகிறார், குயில்பாட்டு எழுதுகிறார், கண்ணன் பற்றிய பாடல்களை எழுதுகிறார், அப்போதுதான் பாஞ்சாலிசபதம் எழுதுகிறார் மேலும் பகவத் கீதையை மொழிபெயர்த்தது அப்போதுதான் என்றும்,

பாரதியாரை சுதந்திரப் போராட்ட வீரர் என்று சொல்கிறார்கள் அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது என திமிராக பேசிய மதிமாறன் மேலும், அவர் 10 ஆண்டுகள் முழுக்க முழுக்க ஆன்மீக தேடலில் தான் ஈடுபட்டார், இந்து கண்ணோட்டத்தில் செயல்பட்டார், பத்து ஆண்டுகளுக்குப் பின் வெள்ளை அரசு தன்னை மறந்திருக்கும் என்று எண்ணி கடலூர் செல்லும் போது செல்லும் வழியில் பாரதி கைது செய்யப்படுகிறார் கைது செய்யப்பட்ட பின் வெள்ளையர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதிவிட்டு சிறையிலிருந்து விடுதலை ஆகிறார்.

சிறையில் இருந்து வெளியே வந்ததும் எப்படி சாவர்க்கர் தன் வாழ்க்கையில் இறுதி வரை வெள்ளை அரசுக்கு உண்மையாக இருந்தாரோ, அதே போன்று பாரதியும் வெள்ளை அரசுக்கு ஆதரவாக உண்மையாக இருந்தார். சாவர்க்கர் சிறையிலிருந்து வெளியே வந்ததும் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடாமல், காந்திக்கு எதிராகவும் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் போராட்டம் செய்தார், அதேபோன்று பாரதியார் சிறையிலிருந்து வெளியே வந்ததும் வெள்ளையரை எதிர்த்துப் போராடாமல் இந்து கண்ணோட்டத்தில் செயல்பட்டதாக கூறும் மதிமாறன்.

மேலும் தமிழில் முதல்முறையாக இந்து வார்த்தைகளை பிரயோகம் செய்தது பாரதி தான், இந்து ரத்தம், இந்து நெஞ்சம், இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்று முதன் முதலில் தமிழில் எழுதியவர் பாரதியார், 1911இல் இதை பாரதியார் எழுதியுள்ளார் என திராவிட கழகத்தை சேர்ந்த மதிமாறன் பேசியது சுதந்திர போராட்ட வீரர் பாரதியாரை இழிவு செய்வது போன்று உள்ளதாக தேசப்பற்று உள்ள அனைவரின் மத்தியில் கடும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.