ஜனவரி 14 மீண்டும் தமிழகம் வருகிறார் அமித்ஷா.!பீதியில் திராவிட கட்சிகள்! ரஜினிகாந்த் உடன் ஒரே மேடையில் கூட்டணி அறிவிக்க திட்டமா.?

0
Follow on Google News

கடந்த நவம்பர் மாதம் தமிழகம் வந்த அமித்ஷா பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அமித்ஷா தமிழகம் வருவதற்கு சில நாட்களுக்கு முன் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமுர்த்தி போயஸ் கார்டன் சென்று நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்தார், இந்த சந்திப்புக்கு பின்பு தான் அமித்ஷா தமிழகம் வருவது உறுதி செய்யப்பட்டது, பின்பு தமிழகம் வந்த அமித்ஷாவை சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் சந்தித்து பேசினார் ஆடிட்டர் குருமூர்த்தி.

இதனை தொடர்ந்து அமித்ஷா தமிழகம் வந்து திரும்பிய சில தினங்களில் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த், இதனை தொடர்ந்து அமித்ஷா தமிழகம் வருகை, ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு என தமிழக அரசியல் பரபரப்பு பின்னனியில் ஆடிட்டர் குருமூர்த்தி இருப்பதை பல்வேறு அரசியல் விமர்சகர்கள் உறுதி செய்து வருகின்றனர்.இந்நிலையில் சமீபத்தில் அமித்ஷா முன்னிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம், மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்தனர்.

ஆனால் அதே மேடையில் பேசிய அமித்ஷா அதிமுகாவுடனான கூட்டணி குறித்து ஏதும் பேசவில்லை, இதனை தொடர்ந்து துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா 2021 ஜனவரி 14 தேதி சென்னையில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அமித்ஷா மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது, ஜனவரியில் புதிய கட்சி தொடக்கம் டிசம்பர் 31ல் அறிவிப்பு என ரஜினிகாந்த் தெரிவித்துள்ள நிலையில், அமித்ஷா மற்றும் ரஜினிகாந்த் இருவரும் ஒரே மேடையில் பங்குபெற இருக்கும் துக்ளக் ஆண்டுவிழா நிகழ்ச்சி தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆடிட்டர் குருமூர்த்தி சமீப காலமாக அமித்ஷா மற்றும் ரஜினிகாந்த் இருவரையும் தொடர்ந்து சந்தித்து வரும் நிலையில் பாஜக மற்றும் ரஜினிகாந்த் கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடும் நிகழ்வாக துக்ளக் ஆண்டுவிழா நிகழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது, ஆகையால் துக்ளக் ஆண்டுவிழா நிகழ்ச்சிக்கு பின் தமிழக அரசியல் சூடு பிடிக்கும் என கூறப்படுகிறது, மேலும் துக்ளக் ஆண்டுவிழாவுக்கு முன்பே ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சியை தொடங்கிவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணியை அதிமுக தலைவர்கள் அமித்ஷா முன்னிலையில் உறுதி செய்த நிலையில் மீண்டும் தமிழகம் வரும் அமித்ஷா வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் உடன் கூட்டணியை துக்ளக் ஆண்டுவிழா மேடையில் உறுதி செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அதிமுக மற்றும் திமுக உட்பட முக்கிய கட்சிகள் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் திகைத்து போய் பெரும் பீதியில் இருந்து வருவது குறிப்படத்தக்கது.இரண்டு மாதத்துக்குள் இரண்டு முறை அமித்ஷா தமிழகம் வருவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.