உசிலம்பட்டி அருகே சுருக்கட்டான்பட்டியை சேர்ந்தவர் முருகன் (42) எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் இவர் உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ நீதிபதி வீட்டு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த சில வருடங்கவாக எலக்ட்ரீசியன் சம்பந்தமான அணைத்து வேலைகளையும் செய்து வந்துள்ளார், தொடர்ந்து எம்எல்ஏ உடன் நெருக்கி பழக தொடங்கிய முருகன் நாளடைவில் அவருடைய நம்பிக்கை கூறியவராக விளங்கினார்.
இந்நிலையில் அதிமுக எம்எல்ஏ நீதிபதி அவ்வப்போது பணத்தை மொத்தமாக சூட்கேசில் வைத்து முருகனிடம் கொடுத்து வைப்பதும், பின் தேவை படும்போது வாங்கி கொள்வதும் வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் முருகனிடம் பணத்தை சூட்கேசில் வைத்து கொடுத்துள்ளார் அதிமுக எம்எல்ஏ நீதிபதி, அதை தனது வீட்டில் பாதுகாப்பாக வைத்துள்ளார் முருகன்.கடந்த இரு தினங்களுக்கு முன் முருகனிடம் இருந்த பணத்தை எடுத்து வர சொல்லியுள்ளார் அதிமுக எம்எல்ஏ நீதிபதி.
ஆனால் சூட்கேசில் இருந்த பணத்தில் 8 லட்சம் குறைவாக இருந்ததாக கூறி, முருகன் மற்றும் அவருடைய மனைவியை அழைத்து, வீட்டில் பூட்டி வைத்து அதிமுக எம்எல்ஏ நீதிபதி அடித்ததாக கூறபடுகிறது.பணத்தை எங்கே வைத்துள்ளாய் என கேட்டு மிரட்டியதற்கு நீங்கள் கொடுத்த சூட்கேஸை எதுவும் செய்யாமல் அப்படியே கொண்டு வந்துளேன் என முருகன் தெரிவித்துள்ளார்.ஆனால் அதிமுக எம்எல்ஏ நீதிபதி உண்மை சொல் என விடிய விடிய முருகன் தம்பதியரை அடித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது மகன் முருகன் மற்றும் மருமகளை காணவில்லை என முருகன் தந்தை உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார், இதனை தொடர்ந்து அதிமுக எம்எல்ஏ நீதிபதி வீட்டில் அடைத்து வைத்திருந்த முருகன் மற்றும் அவருடைய மனைவி சுகந்தி இருவரும் தப்பித்து காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். தப்பித்து வந்த முருகன் கூறுகையில், எங்களை அதிமுக எம்எல்ஏ நீதிபதி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் அடித்து துன்புறுத்தியதாகவும்.
என்னுடைய மனைவியிடம் இருந்த 25 சவரன் நகையை பறித்து கொண்டு எங்கள் பணத்தில் இருந்து தானே எந்த நகையெல்லாம் வாங்கினீங்க என்று மிரட்டுகிறார்கள், என அவர்கள் கண்ணீர் மல்க பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது, காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த தம்பதியர் இருவரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், இந்த சம்பவம் உசிலம்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.