அதிமுக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் தனது டிவீட்டர் பக்கத்தில் கருணாநிதி புகைப்படத்துடன் யார் குற்றவாளி என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் வெளியிட்டுள்ளார் அதில், பயணித்த ரயிலுக்கு பயணச்சீட்டு எடுக்காத குற்றவாளி! பாக்கி வைத்து குடியிருந்த வீட்டுக்கு வாடகை கொடுக்காமல் பதுங்கி ஓடிவந்த பக்கா குற்றவாளி! கட்சிப் பணத்தில் கையாடல் செய்திட்ட கள்ளக் கணக்கு குற்றவாளி! வீரானம் குழாயில் ஏராளம் கொள்ளையடித்து சத்தியநாராயணா சகோதரர்களை சாகடிக்க குற்றவாளி! வறுமைக்கு தன்னைவிற்ற வழிதவறிய பரிதாபத்திடம் கணக்கு வைத்து எமாற்றிய கழிசடை குற்றவாளி!
மாற்றான் மனைவியை அபகரித்து தர்மாம்பாளை ராசாத்தியாக்கிய தரங்கெட்ட குற்றவாளி.! அவரையும் யாரென்றே தெரியாதென அடித்துச் சத்தியம் செய்த அக்கிரமக் குற்றவாளி! மகளையும், மகனையும் பிள்ளையே இல்லையென மறுப்பறிக்கை விடுகின்ற மானங்கெட்ட குற்றவாளி! தலித்துகளின் சம்பந்தி, நாடார்வீட்டு மருமகன், நானும் ஒரு சாஸ்திரி, செட்டியார் வீட்டு சம்பந்தி… என ஊருக்கு ஒரு சாதி சொல்லி உலவிய குற்றவாளி.
சர்க்காரியாவிடம் சான்றிதழ் பெற்றுவந்த விஞ்ஞானப்பூர்வ குற்றவாளி. பூச்சிமருந்து தெளிப்பதாக பொய்க்கணக்கு எழுதிய குற்றவாளி! கடலையே தூர் வாருவதாய் களவாடிய குற்றவாளி! ஆண்டிமுத்து ராசாவை நோன்டிவிட்டு இரண்டு லட்சம் கோடிகளை அடித்து வந்த அலைக்கற்றை குற்றவாளி! தேசத்தின் ரகசியத்தை அண்டை நாட்டுக்கு துப்புச் சொல்லி மூன்னூற்று அம்பத்து ஆறில் முடிபறிப்புக்கு ஆளாள மு.க.வே குற்றவாளி.
பாதாளச் சுரங்கம் வெட்டி ஆப்டிகல் பையர் கேபிள் பதித்து அரசு சொத்தை கொள்ளையடித்த கேடிப் பேரன்களை உருவாக்கிய கோல்மால்புரக் குற்றவாளி! கனிமவளம் திருடுவதற்கும் கார் இறக்குமதியில் மோசடி செய்வதற்கும் களைகளை விளைவித்து களவுகளை பயில்வித்து வாழையடி வாழையாய் வம்சாவளிகளை உருவாக்கிய வக்கிரக் குற்றவாளி! உதயகுமார், தா.கிருட்டினான், லீலாவதி, அண்ணாநகர் ரமேஷ் பெரம்பலூர் சாதிக் என்றெனும் பட்டியலிட முடியா உயிர்களை பரலோகம் அனுப்பிவைத்த படுபாவி குற்றவாளி, வித்தவுட்டாய்’ புறப்பட்ட குற்றவாளி! வீட்டையும் கோர்ட்டாக மாற்றிய குற்றவாளி! திருந்தாத குற்றவாளி தீயசக்தியே குற்றவாளி!