வரும் சட்டமன்ற தேர்தலில் உங்களில் ஒருவர் எடப்பாடியாரா.? இல்லை வீடியோ காலுக்கு கூட விக்கு மாட்டும் ஸ்டாலினா என்று பார்த்துடலாம் என அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நடிகை விந்தியா தெரிவித்துள்ளார் மேலும் நமது அம்மா நாளிதழுக்கு அளித்த பேட்டியில், சாமியை கூட ஆத்தான்னு தான் சொல்லி பழக்கம், அம்மா தான் எங்களுக்கு சாமி, நாங்க எங்க ஆத்தாவின் படத்தையும் கொள்கையையும் தூக்கிட்டு சுத்துறோம்,
தைரியம் இருக்கிறவனை அடிச்சா திருப்பி அடிப்பான், கோழைங்க தான் பயத்துல சத்தமா அழுகும், ராஜாவும் அந்த மாதிரி ஒரு பயந்தாங்கொள்ளி குழந்தை, ஒரு படத்தில் வடிவேலு கூட வந்தவனை பயத்தோடு கேட்பாரு, ஏன்டா ஏன் கத்துற நீயே மாட்டி விட்டுடுவ போல இருக்கேன்னு, அந்த மாதிரி எங்கயாவது மறுபடி 2ஜி வழக்கில் கைது பண்ணி உள்ள தள்ளி விடுவார்கள் என்ற பயத்தில் அழுவுற பாப்பா தான் ராஜா,
உண்மையான விவசாயி உரம் போட்டு மண்ணில் பயிர் நடனும், பாரின் போகி மண்டையில டேஸ் நடக்கூடாது, இலக்கை நம்பி வாழ்ந்தவன் கூட ஜெயிப்பான், விக்க நம்பி வாழ்ந்தவன் ஜெயித்ததா சரித்திரமே கிடையாது, தாத்தா மொழி வளர்கிறேனு மொத்த மக்களையும் ஏமாற்றி வளத்த ஒருமொழி கனிமொழி, அவங்க தான் உள்துறை அமைச்சரை முதல்வர் பார்க்க போனதே அவமானம் என்கிறார்கள், அப்படியானால் திகார் ஜெயிலில் ஊழல் பண்ணி உள்ள போன கனிமொழியை காப்பாற்ற எட்டு மந்திரி, துணைவி உடன் டெல்லி சென்ற தாத்தாவை என்ன சொல்லுவார் ஆ.ராஜா.
ஏதோ விக்கு வச்சமா, வேஷம் போட்டமா, பொட்டல் காட்டில் போட்டோ ஷூட் பண்ணினோமா, என்று போயிட்டே இருக்கணும், அத விட்டுட்டு நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான் மாதிரி நானும் விவசாயி நானும் விவசாயி தான் என்று வான்டட வந்து வாங்கி கட்டிக்க கூடாது, கொட்டும் மழை ஆகட்டும் கொரோனா ஆகட்டும் முதல்ல வந்து நிற்பவர் முதல்வர் எடப்பாடியார் எடுத்துச் சொல்ல எத்தனையோ சாதனைகள் இருக்கு அதை விட அதிகமா திமுக சோதனைகள் இருக்கு, மக்களின் ஒருவர் உங்களில் ஒருவர் எடப்பாடியார் இல்லை வீடியோ காலுக்கு விக்கு மாற்றும் ஸ்டாலினால் என வருகிற சட்டமன்ற தேர்தலில் பார்த்துடலாம் என நடிகை விந்திய தெரிவித்துள்ளார்.