கடந்த ஆறு மாதங்களில் தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது, தமிழகத்தில் பாஜக எங்கே என கேள்வி எழுப்பியவர்கள் மத்தியில், பாஜகவின் அரசியல் ஆட்டத்தை எதிகொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் திணறி வருவதை கண்டு ஆச்சரியத்தில் உள்ளனர் அந்த அளவுக்கு தமிழக அரசியல் களம் மாறியுள்ளது, கொரோனா தொற்று வருவதற்கு முன் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிராக எதிர்ப்பு அரசியலை கையில் எடுக்க, தமிழக பாஜக குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பொதுக்கூட்டம் பேரணி என தொடங்கியதை தொடர்ந்து தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியது.
இதனை தொடர்ந்து கந்த சஷ்டி கவசத்தை இழிவு செய்து பெரியாரிஸ்ட்கள் நடத்தும் கறுப்பர் கூட்டம் வீடியோ வெளியிட தமிழக பாஜக அதை சரியாக கையாண்டு தமிழக இந்துக்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது, இதனை தொடர்ந்து கறுப்பார் கூட்டத்தை கண்டித்தது தமிழக முழுவதும் விளக்கு பூஜை என பல்வேறு யுக்திகளை கையாண்டு போராட்டம் ஆர்ப்பாட்டம் என தமிழக இந்துக்களை ஒன்றிணைக்க தொடங்கியது தமிழக பாஜக.
இந்த யுக்தி தமிழக மக்களிடம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த தமிழ் கடவுளாக வணங்க கூடிய முருகனின் வேலை கையில் எடுத்தது தமிழக பாஜக, தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு கடந்த நவம்பர் 6-ம் தேதி முதல் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் வலம் வந்து கொண்டிருக்கிறது வேல் யாத்திரை, யாத்திரை செல்லும் வழியெங்கும் மக்கள் பெருமளவில் கூட்டம் கூடுவது எதிர்கட்சிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனை தொடர்ந்து பாஜகவின் அரசியலை எதிர்கொள்ள என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வந்த திமுக, அந்த கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு பிரச்சாரமும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேல் யாத்திரை போன்று தமிழகம் முழுவதும் திமுக தலைவர் முக ஸ்டாலின் வலம் வர விடியலை நோக்கி என்ற பயணத்தை தொடங்க இருக்கிறார் ஸ்டாலின், அதற்கான வாகனங்களும் வேலயாத்திரை வாகனம் போன்று வடிமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக புகைப்படம் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், பாஜகவின் வேல் யாத்திரையை தனது விடியலை நோக்கி பயணத்தின் மூலம் முறியடிப்பாரா திமுக தலைவர் ஸ்டாலின் என்பதை அவர் விடியலை நோக்கி பயணத்தின் போது மக்கள் மத்தியில் பேசும் பேச்சுக்களை வைத்து தான் கணக்கிட முடியும் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள், அதே நேரத்தில் விடியலை நோக்கி பயணம் கடந்த 2016ம் ஆண்டு ஸ்டாலின் நடத்திய நமக்கு நாமே போன்று நகைச்சுவையாக இருக்கும் என மீம்ஸ் கிரியேட்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.