நான்குசக்கர வாகனங்களுக்கு இனி பாஸ்டேக் கட்டாயம்..! மத்திய அமைச்சகம் அறிவிப்பு.!

0
Follow on Google News

2017-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதிக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட (நான்குசக்கர வாகனங்கள்) எம் மற்றும் என் வகை மோட்டார் வாகனங்களில் பழைய வாகனங்களுக்கு 2021ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் பாஸ்டேக் கட்டாயம் என மத்திய சாலைப் போக்குவரத்து & நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய மோட்டார் வாகன விதிகளில் இதற்காக திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சகத்தின் சார்பில் 2020 நவம்பர் 6-ம் தேதியிட்ட ஜிஎஸ்ஆர் 690 (இ) என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-ன் படி2017-ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல், வாகன உற்பத்தியாளர்கள் அல்லது முகவர்களால் விநியோகிக்கப்பட்ட பதிவு செய்யப்படும் அனைத்து புதிய நான்கு சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதில் மேலும், போக்குவரத்து வாகனங்கள் பாஸ்டேக் பொருத்தப்பட்ட பின்னரே பிட்னஸ் சான்றிதழைப் புதுப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய அனுமதி வாகனங்கள் பாஸ்டேக் பொருத்துவது 2019-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.