இயக்குனர் லிங்குசாமி இயக்கிய பல படங்கள் வெற்றி படங்களாக இடப்பெற்று,வெற்றி பட இயக்குனர் என்ற பெயருடன் ஒரு காலத்தில் சினிமாவில் வலம் வந்தவர் இயக்குனர் லிங்குசாமி. ஆனந்தம் படத்தில் இயக்குனராக அறிமுகமான லிங்குசாமி முதல் படமே மிக பெரிய வெற்றியை அவருக்கு தேடி தந்தது, குடும்பங்கள் கொண்டாடும் கமர்சியல் படமாக அமைந்தது லிங்குசாமியின் ஆனந்தம் திரைப்படம்.
இதனை தொடர்ந்து மாதவன், மீரா ஜாஸ்மின் நடிப்பில் லிங்குசாமி இயக்கிய இரண்டாவது படம் ரன். இந்த படம் இளைஞர் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று இயக்குனர் லிங்குசாமியை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றது. தொடர்ந்து சண்டக்கோழி, பீமா, வேட்டை, பையா போன்ற வெற்றி படங்களை இயக்கி வந்த லிங்குசாமி நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் திரைப்படத்தை இயக்கிய பின் தமிழ் சினிமாவில் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட்டார்.
இதனை தொடர்ந்து இயக்குனர் பணியை கைவிட்டு தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார் லிங்குசாமி, ஆரம்ப கட்டத்தில் லிங்கசாமி தயாரித்த படங்கள் வெற்றி பெற்று வந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான உத்தமவில்லன் திரைப்படத்தை தயாரித்து மிக பெரிய நஷ்டத்தை சந்தித்தார் லிங்குசாமி, அந்த நஷ்டத்தில் இருந்து எழுந்து வர தற்போது வரை போராடி வரும் லிங்குசாமி பொருளாதார ரீதியில் மிக பெரிய அளவில் கஷ்டப்பட்டு வருபவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் வெற்றி இயக்குனராக வலம் வந்த லிங்குசாமி அஞ்சான் படத்தை இயக்கிய பின் தனது சினிமா வாழ்க்கையை இழந்தவர், அதன் பின் கமல்ஹாசன் நடிப்பில் உருவான உத்தமவில்லன் திரைப்படத்தை தயாரித்து மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு நடுதெருவில் நிற்கும் நிலைமைக்கு லிங்குசாமி தள்ளப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.