சமீபத்தில் நடந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் கலந்து கொண்ட திமுக தலைவர் முக ஸ்டாலின் ராமநாதபுரம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த சென்றபோது அங்கே முக ஸ்டாலினுக்கு விபூதி வழங்கப்பட்டது, அப்போது விபூதியை பெற்று கொண்ட முக ஸ்டாலின் அலட்சியமாக தூசியை தட்டிவிடுவது போன்று கீழே தட்டிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, இது குறிப்பாக முக்குலத்தோர் சமூக மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து பசும்பொன் தேவரை அவமரியாதை செய்ததாக முக ஸ்டாலினுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது, பல்வேறு அரசியல் காட்சிகள் முக ஸ்டாலினை கண்டித்த நிலையில், முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த கட்சிகள் ஆர்ப்பாட்டம், போராட்டம் என ஸ்டாலினுக்கு எதிராக அறிவித்தனர், இந்நிலையில் பசும்பொன் தேவரின் 113 வது குருபூஜை அன்று தேவரை அவமரியாதை செய்த முக ஸ்டாலின் உருவ பொம்மை 113 இடங்களில் தீயிட்டு எரிக்கப்படும் என்று பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனர் முருகன் ஜி அறிவித்தார்.
இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 113 இடங்களில் முக ஸ்டாலின் உருவபொம்மை எரிக்கப்பட்டது, மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை முன்பு முக ஸ்டாலின் உருவபொம்மையை பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியினர் எரித்து ஸ்டாலினுக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.