வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சகாயம் IAS முன்னிறுத்தப்படுவர் என தகவல் வெளியாகி உள்ளது. ஐஏஎஸ் அதிகாரி சகாயம்.கடந்த 7 ஆண்டுகளாக அறிவியல்நகர துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார். 57 வயதை நெருங்கியுள்ள அவர், ஓய்வு பெற 3 ஆண்டுஉள்ள நிலையில், விருப்ப ஓய்வில்செல்ல முடிவெடுத்துள்ளார்.இதற்கான கடிதத்தை, கடந்தஅக்.2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று அரசுக்கு அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அரசியலில் களம் காண தான் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற சகாயம் IAS முடிவெடுத்ததாக கூறப்படுகிறது, இதன் பின்னணியில் கிருஸ்துவ கூட்டமைப்பு இருப்பதாக கூறப்படுகிறது, இந்நிலையில் சகாயத்தை நாம் தமிழர் கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த கிருஸ்துவ கூட்டமைப்பு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாக தெரிகிறது.
பேச்சுவார்த்தையின் போது ஆரம்பத்தில் உடன்படாத சீமான் இதற்கும் முன் பலமுறை கிருஸ்துவ கூட்டமைப்பின் மூலம் நாம் தமிழர் கட்சிக்கு நிதி உதவி அளித்தது வரை பல்வேறு உதவிகளை செய்துள்ளதை மனதில் வைத்து மேலும் சகாயத்தை நாம் தமிழர் கட்சி முதல்வராக முன்னிறுத்தினால் அரசியலில் நாம் தமிழர் கட்சிக்கு ஒரு மாற்றம் கிடைக்கும் என சீமான் உணர்ந்ததை தொடர்ந்து பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளதால் நாம் தமிழர் கட்சியின் முதலவர் வேட்பாளராக சகாயம் IAS முன்னிருந்த அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது,
இந்நிலையில் சகாயம் IAS விருப்ப ஓய்வு குறித்த பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,சகாயம் ஐ.ஏ.எஸை அரசாங்கம் அனுப்பவில்லை. அவர் அதிகாரத்தில் இருக்கும் போதே கிறிஸ்துவ மதத்தை பரப்பியவர். தற்போது முழுமையாக மதத்தைப் பரப்ப வேண்டும் என பதவி விலகுகிறார் என நினைக்கிறேன் என்றார். இந்நிலையில் அரசு பணியில் இருக்கும் போதே அவர் சார்ந்த மதத்தை பரப்பியவர் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் என்னவாகும் என மக்கள் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.