ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை பெற்று வரும் ஏழு நபர்களில் ஒருவரான பேரறிவாளன் விடுதலை தொடர்பாக நேற்று உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தமிழக அரசு, பேரறிவாளனை விடுதலை செய்ய சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அது தொடர்பாக 2 ஆண்டுகள் வரையிலும் முடிவு எடுக்காத காரணத்தால் உச்ச நீதிமன்றம் தன்னுடைய அதிருப்தியை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து திராவிட கழக தலைவர் வீரமணி, சீமான், உதயநிதி ஸ்டாலின், போன்றார் கருத்து தெரிவித்து வருகின்றனர். விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த வன்னியரசு இது குறித்து கூறுகையில், கால் நூற்றாண்டுக்கும் மேலாக கொடுஞ்சிறைப்பட்டிருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி,ஜெயக்குமார்,ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய குற்றமற்றத் தமிழர்களின் விடுதலைக்காக
தேசமே காத்திருக்கிறது. விடுதலைக்காக எதிர்பார்த்திருக்கிறது. என தெரிவித்துள்ளார்.
இதற்கு தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமெரிக்க நாராயணன் பதிலளிக்கையில், உச்சநீதிமன்றத்தின் முன் குற்றவாளிகள் என்று எள்ளளவு சந்தேகம் இல்லாமல் நிரூபிக்கப்பட்டு தூக்கு தண்டனை வழங்கப்பட்டவர்களை குற்றமற்றவர்கள் என்று சொல்வது வன்னியரசு போன்ற புத்திசாலிகள் மட்டுமே சொல்ல முடியும் என தெரிவித்த அமெரிக்க நாராயணன்,
மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ராஜீவ்காந்தி மற்றும் 14 தமிழர்களைக் கொன்ற அவர்களை விடுவிக்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய போது அதை எதிர்த்து பத்திரிக்கையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியையும் வெளியிட்டுள்ளார், இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் மற்றும் தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் யாரும் அவர்கள் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான ராஜிவ்காந்தி கொலை குற்றவாளிகள் குறித்து கண்டு கொள்ளாத நிலையில் அமெரிக்க நாராயணன் மட்டும் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.