9 மாதத்துக்கு பின் வெளியே வரும் ரஜினிகாந்த்.! ராகவேந்திர மண்டபத்தில் ரஜினியின் முக்கிய அறிவிப்பு என்ன.?

0
Follow on Google News

நான் அரசியலுக்கு வருவது உறுதி, புதிய கட்சி தொடங்கி 2021ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் டிசம்பர் 31ம் தேதி 2017ல் ரஜினிகாந்த் தனது ரசிகர்கள் மத்தியில் அறிவித்து மூன்று வருடங்கள் நிறைவு செய்ய இருக்கும் நிலையில், மேலும் இன்னும் சட்டசபை தேர்தலுக்கு ஆறு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் இதுவரை ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை.

ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு வெளியான இந்த மூன்று வருட இடைப்பட்ட காலத்தில் தொடர்ந்து பல முறை தனது ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள் சந்திப்பு, முக்கிய அரசியல் தலைவர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் என தொடர்ந்து தனது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து தனது அரசியல் வருகை குறித்து ஆலோசனை நடத்தி வந்தார், இந்நிலையில் அரசியல் கட்சி தொடங்குவதற்கு அணைத்து ஏற்பாடுகளும் நடந்து வந்த நிலையில் கொரோன தொற்றின் காரணமாக ரஜினிகாந்தின் புதிய அரசியல் கட்சி தொடங்கும் நிகழ்வு தடைபட்டது.

இந்நிலையில் சமீபத்தில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி போயஸ் கார்டன் சென்று ரஜினியை சந்தித்தது, பின் அமித்ஷா தமிழகம் வந்து அதிமுக கூட்டணியை உறுதி செய்தது என பல்வேறு அரசியல் மாற்றங்கள் நடந்து வரும் தமிழக அரசியலில் அடுத்த கட்ட பரபரப்பாக நாளை மாவட்ட ரசிகர் மன்ற தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார் ரஜினிகாந்த், சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த கூட்டம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து 9 மாதங்களுக்கு பின் வீட்டை விட்டு வெளியில் வரும் ரஜினிகாந்த் பற்றி அவருக்கு நெருக்கிய வட்டாரத்தில் நாம் விசாரித்ததில், புதிய அரசியல் கட்சி தொடங்குவதில் இந்த நிமிடம் வரை ரஜினிகாந்த் உறுதியாக இருப்பதாகவும், 1996ம் ஆண்டு தேர்தலில் ஜி.கே.மூப்பனார் குறுகிய காலத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடங்கி மிக பெரிய மாற்றத்தை உருவாக்கியது போன்று, மிக குறுகிய காலத்தில் புதிய கட்சியை தொடங்கி மிக பெரிய மாற்றத்தை ரஜினிக்காந்த் உருவாக்குவார் என்றும், அதற்கான தகவல் நாளை தனது ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள் சந்திப்புக்குபின் வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.